நீளமான கூந்தலை பெற உதவும் அதிசய மூலிகை எண்ணெய்கள்!

கூந்தல் வளர எண்ணெயின் போஷாக்கு மிக முக்கியம். அவை கூந்தலின் வேர்க்கால்களை தூண்டிவிடுகிறது. ஒவ்வொரு என்ணெய்க்கும் தனித்துவம் உள்ளது.

தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆலிவ் எண்ணெய் ஆகியவை கூந்தலின் வளர்ச்சியை தூண்டுகின்றன. அவற்றோடு மூலிகைகளின் குணங்களும் சேர்ந்தால் ஆரோக்கியமான கூந்தல் மிளிரும்.

மார்கெட்டுகளில் நிறைய விதவிதமான எண்ணெய்கள் வந்தாலும் அவைகளில் கலந்திருக்கும் கெமிக்கல் சருமத்தில் கட்டாயம் வினை புரியும்.

ஆகவே வீட்டிலேயே மூலிகை எண்ணெய்களை தயாரித்து, அவற்றின் உன்னத பலன்களை பெறுங்கள்.

மிருதுவான கருமையான கூந்தல் பெற :

கடுமையான முடி உதிர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? சொட்டை ஆங்காங்கே தெரிவது போலிருக்கிறதா? இந்த எண்ணை நிச்சயம் உங்களுக்கு உதவும்.

எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையானவை :

செம்பருத்தி பூ - 5 இதழ்கள்
செம்பருத்தி இலை - 5 இலைகள்
எண்ணெய் - 100 மி.லி.
எண்ணெய் எதுவானாலும் உங்கள் விருப்பப்படி எடுத்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி இதழ்களையும் இலைகளையும் கழுவி , ஈரமில்லாமல் அரைத்துக் கொள்ளுங்கள். நீர் விடக் கூடாது. நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.

இப்போது எண்ணெயை அடுப்பில் சூடுபடுத்துங்கள். எண்ணெய் சூடானதும் இந்த செம்பருத்தி பேஸ்ட்டை அதில் போடவும். 1 ஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்க்கவும். நுரை அடங்கியதும், அடுப்பை அணைத்து ஆற விடுங்கள். பின்னர் வடிகட்டி இந்த எண்ணையை பாட்டிலில் எடுத்துக் கொள்ளவும்.
இதனை தினமும் உபயோக்கிக்கலாம். முடியின் வேர்கால்களை தூண்டும்படி ஸ்கால்ப்பில் 1 ஸ்பூன் அளவு தேய்த்து வாருங்கள். முடியின் வேர்ப்பகுதியில் மட்டும் தடவுவதால் பிசுபிசுப்பு இருக்காது.
இவ்வாறு செய்து வந்தால், வேர்கால்கள் வலுப்பெற்று, மிருதுவான, மின்னும் கூந்தல் கிடைக்கும். கூந்தல் உதிர்வது நின்று விடும்.

பொடுகிற்கான சிட்ரஸ் எண்ணெய் :

கூந்தல் உதிர்வதற்கு மிக முக்கியமான காரணம் பொடுகுதான்.அதிகப்படிய வறட்சியினாலும், கிருமிகளின் தொற்றாலும் பொடுகு ஏற்படும்.

தொற்றுக்களை அகற்றி, வலுவான கூந்தல் கிடைக்க சிட்ரஸ் நிறைந்த பழங்கள் பயன் தரும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையின் தோலை எடுத்து வெய்யிலில் காயவையுங்கள். பின் அவற்றை பொடித்துக் கொள்ளுங்கள்.
100 மி.லி எண்ணையை சூடு படுத்தி, இந்த சிட்ரஸ் பழப் பொடியை 1 ஸ்பூன் எண்ணெயில் பொடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். நன்றாக ஆறியதும், வடிகட்டி, ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

தினமும் இரவில் தூங்குவதற்கு முன் இந்த எண்ணெயை தலையில் தேய்த்துவிட்டு படுங்கள். நாளடைவில் பொடுகு காணாமல் போய்விடும்.

தலை அரிப்பிற்கான துளசி எண்ணெய் :

அதிகப்படியான வறட்சியினால் தலையில் அரிப்பு எற்படும். மேலும் முடி உதிர்தல் வேகமாக நடக்கும். இவற்றை துளசியின் மருத்துவ குணம் சரிபடுத்துகிறது.

ஒரு கப் துளசி இலைகளை நைஸாக சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து, 100 மி.லி. எண்ணெயை கொதிக்க விடுங்கள். அதில் துளசி பேஸ்ட்டை போடவும். நுரை அடங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விடுங்கள். பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

நெல்லிக்காய் எண்ணெய் :
நெல்லிக்காய் நரை முடியை தடுக்கும். கூந்தல் வளர்ச்சியை அபாரமாகத் தூண்டும். மென்மையான கூந்தலை தரும். முதலில் 2 டம்ளர் நீரில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து கொதிக்க வையுங்கள்.
நீர் வற்றி அரை டம்ளர் குறையும் வரை சுண்ட காய்ச்சியபின் , அடுப்பை அணைத்து நீரை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டி நீர்தான் நெல்லிக்காய் டிகாஷன்.
பின்னர் துணியில் மீதமிருக்கும் நெல்லிக்காய் துகள்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் டிகாஷன், நெல்லிக்காய் துகள்கள் மற்றும் 100 மி.லி. தேங்காய் என்ணெய் கலந்து கொதிக்க வையுங்கள்.
நீர் முழுவதும் வற்றிப் போன பின் நெல்லிக்காய் எண்ணெய் மட்டும் மீதமிருக்கும். அப்போது அடுப்பை அணைத்து, ஆறியபின் பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் இரு முறை இந்த எண்ணெயை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால், சிறந்த முறையில் கூந்தல் வளரும். முடி உதிர்தல் நிற்கும்.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.