கடமை நேரத்தில் ஆசிரிர்கள் கைத் தொலைபேசி பயன்படுத்த தடை..!!


வடமேல் மாகாணத்தில் ஆசிரியர்கள் கடமை நேரத்தில் கைத் தொலைபேசிகளை பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா குமார ராஜபக்ச இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இதுவரையில் சட்டத்தில் வெறுமனே காணப்பட்ட இந்த கைத் தொலைபேசி பயன்பாட்டுத் தடை செயற்பாட்டு ரீதியில் அமுல்படுத்தப்பட உள்ளது என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பாடசாலை நேரத்தில் ஆசிரிர்கள் கைத் தொலைபேசி பயன்படுத்துவது குறித்து மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமக்கு முறைப்பாடு கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்களின் செயற்திறன் மற்றும் மாணவர்களின் நலன்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.