பயிற்சியின் போது போர் விமானம் மாயம்: தேடும் பணிகள் தீவிரம்..!!

வியட்நாமில் பயிற்சியின் போது மாயமான போர் விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
வியட்நாம் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று பயிற்சியின் போது மாயமாகியுள்ளது. மாயமான விமானத்தினை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
மாயமானது ரஷ்யாவில் தயாரான சுகோய் எம்.கே-2 ரக ஜெட் விமானம். இந்த விமான கடைசியாக செவ்வாய்க்கிழமை காலை வரை தொடர்பில் இருந்தது.
விமானத்தில் இரண்டு பைலட்டுக்கள் இருந்தனர்.
இது தொடர்பாக வியட்நாம் அரசின் துவோய் டிரி செய்திதாளில், “லீ வேன் குவோங் என்ற மீனவர் மஞ்சள் நதியை ஒட்டியுள்ள மேட் தீவுப் பகுதிக்கு அருகே இந்த விமானத்தை பார்த்ததாக கூறியுள்ளார்.
தீவு அருகே விமானத்தின் எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேடும் பணியில் 4 விமானங்களும், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த ராணுவ விமான விபத்தில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.