மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்ற ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் !

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகள் சிலருடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்ற ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 8 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டுமென நேற்றைய தினம், வலய கல்வி பணிமனைக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் உள்ள ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்கும் ஏழாம் வகுப்பு மாணவிகள் சிலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக அந்த பாடசாலையில் பணியாற்றும் மற்றுமொரு ஆசிரியராலும், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களாலும் அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதிலும், அதிபர் இதனை மூடி மறைக்க முட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக கல்விப் பணிப்பாளர்களும் நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பெற்றோர்களும் பாடசாலையின் மாணவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.