சாலாவ தீ : விழுந்துள்ள ஆயுத தளபாடங்களை நெருங்க வேண்டாம் - இராணுவம் எச்சரிக்கை

சாலாவ இராணுவ முகாமில் நேற்று ஏற்பட்ட தீச் சம்பவத்தினால் அப்பிரதேசத்திலுள்ள வீடுகள் மற்றும் பாதை ஓரங்கள் என்பவற்றில் ஆயுதங்களின் பாகங்கள் சிதறிக் காணப்படுவதாகவும், பொது மக்கள் அவற்றை நெருக்க வேண்டாம் எனவும் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர சற்று முன்னர் இதனை அறிவித்தார்.
இவ்வாறு வெடிபொருட்களின் பாகங்கள் இருப்பதை கண்டவுடன் அவற்றை நெருங்காமல், 0113818609 எனும் இலக்கத்துடனோ அல்லது 0112434351 எனும் இலக்கத்துடனோ உடன் தொடர்பு கொள்ளுமாறும் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறு சிதறியுள்ள வெடிபொருட்களின் பாகங்களினால், பொதுமக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்பட இடமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில், வெடிக்காத சில ஆயுதங்களும் காணப்படலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இராணுவ ஆயுத தலபாடங்களை நினைவுச் சின்னங்களாக எடுத்து வைப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் எனவும் பிரிகேடியர் மேலும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.