கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழில் இளைஞர் கைது..!

யாழ்ப்பாணம் – குருநகரில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 126 கிராம் கஞ்சாவினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குருநகர் பகுதியை சேர்ந்த 21வயதாண இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கஞ்சாவினை வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்தே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே கஞ்சா தொடர்பான இரண்டு வழக்குகளில் தண்டனை அனுபவித்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்ததுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரனைகளில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குருநகரில் தங்கு தடையின்றி கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதனால், இளைஞர்கள் சீரழியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கஞ்சாவின் புகைக்குள் சிக்கி காணாமல் போய்க்கொண்டிருக்கின்றனர்.

ஒழுங்காக கற்றுத் தேர்ந்து பெற்றோர்களுக்கு பெயர் சம்பாதித்து தருவதற்கு பதில் ஒயிட்னரை நுகர்ந்து தன்னையே அழித்துக்கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாலும் திருமணம் செய்யாத இளைஞர்களே கஞ்சாவை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

எனவே இளைஞர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது.

மேலும், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு
கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் , பொதுமக்கள் மற்றும் பொலீசார் தீவீர நடவடிக்கைகளை எடுத்து கிராமத்தின் இளைஞர்களை அபாயத்திலிருந்து மீட்டு கொள்ளுவீர்கள் என்று எதிர் பார்க்கின்றோம்.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.