பட்டப்பகலில் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் வெட்டிக் கொலை !

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வழக்குரைஞர் ரவி 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

வியாசர்பாடி பாலம் அருகே, ரவியின் வீட்டு வாசலில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ரவியை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

ஆள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதியில் பட்டப்பகலில் வழக்குரைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

திருநங்கைகளுக்கு ஆதரவாக அவர் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்ற சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் ரவியின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்..

மேலும் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர் வழக்குரைஞரை கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.