அனுராதபுரத்திற்கு வரும் யாத்திரிகர்களுக்கு எச்சரிக்கை..!!

பொசன் காலத்தை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு வரும் யாத்திரிகர்கள் அங்குள்ள வாவிகளில் குளிப்பது ஆபத்து என அனுராதபுரம் பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் கடந்த காலங்களில் அதிக மழை பெய்ததனால் இங்குள்ள வாவிகளில் அதிகளவு நீர் நிரம்பியுள்ளதாகவும் இதனால் இங்கு குளிப்பது ஆபத்து எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இங்குள்ள வாவிகளில் குளிப்பதற்கு ஏதுவான இடம் எது?, ஆபத்தான இடம் எது? என்பது பற்றி பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளதாகவும் எனவே யாத்திரிகள்அதனைப் பின்பற்றுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பு பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை மீறி வாவிகளில் குளித்த பல பேர் கடந்த வருடங்களில் பலியாகியுள்ளதாகவும் பாதுபாப்புபிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.