பகல் உணவு கொடுக்காததால் பெற்ற தாயை கத்தியால் குத்திய மகன்..!!

பகல் உணவு வழங்காதா காரணத்தினால் பெற்ற தாயை படுகொலை செய்த மகன் ஒருவர் பற்றிய சம்பவமொன்று மாவனல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.

பகல் உணவு கிடைக்காத காரணத்தினால் நபர் ஒருவர் தாயுடன் வாக்கு வாதம் செய்துள்ளார்.

இந்த வாக்குவாதம் இறுதியில் கத்திக் குத்தாக மாறி தாயின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது.
மாவனல்ல பிரதேசத்தில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாவனல்ல அம்புலுகல கந்தேதெனிய தோட்டத்தின் 7ம் இலக்க லயன் அறையைச் சேர்ந்த 52 வயதான கந்தசாமி தேவானி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கத்திக் குத்தை மேற்கொண்ட 36 வயதான வெள்ளயன் புஸ்பகுமார் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு மாவனல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கேகாலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.