அனுராதபுரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இரண்டு மாத குழந்தை மீட்பு!

அனுராதபுரம் ஸ்ரீமகாபோதி மற்றும் ருவன்வெளிசாயவில் இரண்டு மாதங்களேயான குழந்தை ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்தக் குழந்தை தற்சமயம் உடமலுவ பொலிஸாரின் பாதுகாப்பில் இருப்பதாகவும் உடமலுவபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பல மணி நேரங்கள் கடந்தும் இந்தக் குழந்தைக்கு உரிமை கோரி யாரும்வரவில்லை என்றும் தெரிவித்துள்ள பொலிஸார் குறித்த குழந்தையானது வேண்டுமென்றே குறித்த இடத்தில் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை பொசன் தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான யாத்திரீகள் அனுராதபுரம்மற்றும் அதனை அண்டிய புனித இடங்களை நோக்கி படையெடுத்துள்ளதோடு, இங்கு பெருமளவானபொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.