சிலாபத்தில் – கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் பணிப் பகிஸ்கரிப்பு

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் இன்று அதிகாலை முதல் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றன
மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும் பஸ் சாரதி ஒருவர், கடந்த 25ம் திகதி சிலாபம் – காக்கபள்ளிய பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை மேற்கொண்டது சிலாபம் – கொழும்பு பாதையில் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதி ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை தாக்குதலுக்கு இலக்கானவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுபவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சந்தேகநபரை விடுதலை செய்யக் கோரி, சிலாபம் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் இருவர் கடந்த 26ம் திகதி சிலாபம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளனர் எனினும் அதற்கு பொலிஸார் இணங்கவில்லை என, தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இருவரும் பொலிஸ் நிலையத்தின் முன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட முற்பட்ட நிலையில் தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி பொலிஸார் அவர்களையும் கைதுசெய்துள்ளனர்.
அதனடிப்படையில் கைதான பஸ் சாரதி உள்ளிட்ட மூவரையும் விடுவிக்கக் கோரி, வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.