பிரச்சினைகளுக்குத் தீர்க்க GMOA உடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்

பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 

அண்மையில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

தப்பான அபிப்பிராயங்களினால் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

வேலை நிறுத்தப் போராட்டத்தின் வெற்றி அல்லது தோல் பற்றி எவ்வித கருத்துக்களையும் வெளியிட விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

புதிதாக போராட்டம் நடத்தப்பட்டால் அவ்வாறான நிலைமைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது என தமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறெனினும், மாபீயா குழுக்களின் அழுத்தங்களுக்கு அடி பணிய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.