அமெரிக்காவில் சாதனை படைத்து வரும் கருப்பின பெண் பட்டதாரிகள்

அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கல்லூரிகளில் சென்று பட்டம் பெறும் கருப்பின பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய கல்வி புள்ளிவிபரத்திற்கான மைய அலுவலகம் அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அதில், கடந்த 2009 முதல் 2010 வரையிலான புள்ளிவிபரத்தில் 68 சதவிகித கருப்பின மாணவர்கள் துணை பட்டங்களையும், 66 சதவிகிதத்தினர் இளங்கலை பட்டத்தையும், 71 சதவிகிதத்தினர் முதுநிலை பட்டத்தையும் மற்றும் 65 சதவிகித கருப்பின மாணவர்கள் முனைவர் பட்டங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1976 முதல் 2012ம் வரையிலான காலக்கட்டத்தில் கல்லூரிகளுக்கு சென்று பட்டம் பெறும் கருப்பின மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
ஆனால், இதற்கு எதிர்மறையாக அந்நாட்டு வெள்ளை மாணவர்களின் எண்ணிக்கை 84 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக குறைந்துள்ளது இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இதே வரிசையில் கல்லூரிகளுக்கு செல்லும் 6.1 சதவிகித வெள்ளை மாணவிகளை விட, அந்நாட்டில் தற்போது 9.7 சதவிகித கருப்பின பெண்கள் கல்லூரிகளுக்கு செல்ல பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.