Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

IPL போட்டி மூலம் 2500 கோடி வருவாய்..!!

Bublished By Admin Onlineceylon on Tuesday, June 14, 2016 | 11:50 PM

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் மூலம் மொத்த வருவாயாக ரூ.2500 கோடி கிடைத்துள்ளது.

கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 9–ந்தேதி முதல் மே 29–ந்தேதி வரை நடந்தது.

இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்த ஐ.பி.எல். போட்டி மூலம் ரூ.2,500 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

டெலிவிசன் ஒளிபரப்பு, விளம்பரங்கள், டிக்கெட் விற்பனை, பொருட்கள் விற்பனை மற்றும் பல்வேறு வகையான விளம்பரங்கள் மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளது.

இது கடந்த ஐ.பி.எல். போட்டியைவிட மிகவும் அதிகமாகும்.

டெலிவிசன் விளம்பரங்கள் மூலம் சோனி பிச்சர்ஸ் நெட்வொர்க் நிறுவனத்துக்கு ரூ.1,100 கோடி கிடைத்தது. ஐ.பி.எல்.லில் விளையாடிய 8 அணிகளும் விளம்பரங்கள் மூலம் ரூ.200 முதல் ரூ. 230 கோடி வருவாயை சம்பாதித்தன.

முதன்மை ஸ்பான்சர் ஷிப் மூலம் கிரிக்கெட் வாரியம் ரூ. 220 முதல் ரூ. 250 கோடியை பெற்றது.

டிக்கெட் விற்பனை மூலம் ரூ.150 முதல் ரூ.160 கோடி வரை கிடைத்தது. இதில் அதிகபட்சமாக பெங்களூர் அணிரூ.25 முதல் ரூ.26 கோடி வரை பெற்றது.

அதற்கு அடுத்தப்படியாக மும்பை அணிக்கு ரூ.24 கோடி முதல் ரூ.26 கோடி வரையிலும், டெல்லி அணிக்கு ரூ.22 முதல் ரூ.24 கோடி வரையிலும் கிடைத்தது.

பொருட்கள் விற்பனை மூலம் ரூ.17 கோடி முதல் ரூ.20 கோடி வரை 8 அணிகளும் பெற்றன.

ஐ.பி.எல். போட்டியை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது. அந்த நிறுவனம் ஒரு ஆண்டுக்கு ரூ.820 கோடி வீதம் 10 ஆண்டுகளுக்கு ரூ.8,200 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐ.பி.எல். போட்டியின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 10 முதல் 12 சதவீதம் அதிகரித்து வருவதாக அமைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved