Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வெள்ளத்தால் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தொடர்புகொள்ளுங்கள்

Bublished By Online Ceylon on Wednesday, June 1, 2016 | 10:24 PM

வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அனர்த்­தங்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்கள், மத்­ர­ஸாக்­களின் சேத­வி­ப­ரங்­களைத் திரட்டி உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு முஸ்லிம் சம­ய­ வி­வ­கார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தைப் பணித்­துள்ளார்.

வெள்­ளத்­தினால் பல குர்ஆன் மத்­ர­ஸாக்கள், பள்­ளி­வா­சல்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளதால் அவை தொடர்­பான விப­ரங்­களைத் திரட்­டியே அதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.  பள்­ளி­வா­சல்கள் மத்­ர­ஸாக்கள் வெள்­ளத்­தினால் உட­மை­களை இழந்­துள்­ளன.

கட்­டி­டங்கள் சிலவும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளன என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என அமைச்சர் ஹலீம் ‘விடி­வெள்ளி’ க்குத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எச்.எம்.ஸமீலை தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வரும் விப­ரங்­களை வழங்­கினார்.

அமைச்சர் ஹலீமின் உத்­த­ர­வுக்­க­மைய திணைக்­களம் வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அனர்த்­தங்­களால் பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்கள் மற்றும் மத்­ர­ஸாக்­களின் விப­ரங்­களைத் திரட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வுள்­ளது.

விப­ரங்­களைத் திரட்டி திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­களால் சேத­வி­ப­ரங்கள் மதிப்­பீடு செய்­யப்­பட்டு உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும்.

அதனால் பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்கள் மற்றும் மத்ரஸாக்களின் நிர்வாகிகள் விபரங்களை எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்பு முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved