அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உதவுங்கள் – முபாறக் மெளலவி

வெல்லம்பிட்டி வெள்ளத்தில் சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தமது முழு சொத்துக்களையும் இழந்துள்ளதால் அவர்களின் வாழ்வை மீள கட்டியெழுப்ப உடனடி தேவையாக ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஒரு இலட்சம் ரூபாய் வழங்க முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜம்இய்யத்துல் உலமா என்பன முன்வர வேண்டும் என உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அறைகூவல் விடுத்துள்ளார்.
மேற்படி அனர்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பல ஊடகவியலாளர்கள் தமது அவல நிலை பற்றி வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளார்கள். அவர்கள் மிகவும் கௌரவமாக இந்த சமூகத்தில் இருந்து கொண்டு தமது பணியை செய்தவர்கள். பாதிக்கப்பட்ட இவர்களுக்கு சில தனி நபர்களும் சில அமைப்புக்களும் உலர் உணவுகளை வழங்கியுள்ளன. இன்னும் சிலர் சில ஆயிரம் ரூபாய்கள் என நிதி உதவி வளங்கியுள்ளனர்.
இவ்வாறு உதவி செய்தவர்களுக்கு உலமா கட்சி இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிப்பதுடன் இவை அவர்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கு உதவாது என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
பாதிக்கப்பட்ட மேற்படி ஊடகவியலாளர்கள் தமது வாழ்வை மீள ஆரம்பிப்பதற்கு உடனடி நிவாரணமாக ஒரு இலட்சம் ரூபாவாவது வழங்கப்பட வேண்டும்.
ஊடக அமைச்சோ அரசாங்கமோ இதுவரை எத்தகைய பண உதவியும் செய்யாத இந்த நிலையில் இவர்களுக்கு உதவி செய்ய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான் மற்றும் மரிக்கார் உட்பட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் முன் வரவேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம்.
எதிர் வரும் நோன்புக்கு முன் இந்த ஊடகவியலாளர்களுக்கு மேற்படி உதவியை செய்யும்படி உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என்

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.