"மஹிந்தவிற்கு ஆபத்து ஏற்பட்டால், மைத்திரியே முழுப் பொறுப்பு"

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் தனிப்பட்ட ரீதியில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினால் நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஊடகவியலாளா சந்திப்பில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு எவ்வாறு எனினும், தஹாம் பேபிக்கும் சத்துரிக்காவிற்கும் நல்ல பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 24 இராணுவ உத்தியோகத்தர்களை தலைமையகத்தில் நாளை பிரசன்னமாகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புடன் சிலர் விளையாடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.