Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

முதலமைச்சர் பதவி விலகாவிட்டால் கிழக்கில் ஆட்சி மாற்றம் வரும்

Bublished By Online Ceylon on Thursday, June 2, 2016 | 6:48 AM

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீட் அஹமட் பதவி விலகத் தவறினால் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் சிங்கள நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
விரைவில் இந்த ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்.கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள முரண்பாடே இதற்கான காரணமாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி நசீர் அஹமட்டிற்கு வழங்கப்பட்டது.
நசீர் அஹமட்டின் நடவடிக்கைகள் குறித்து முழு நாடுமே எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் முதலமச்சரின் நடவடிக்கைகளை கண்டித்திருந்தார்.
சிங்கள மக்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டுமென ஹக்கீம் கூறியிருந்தார்.
முதலமைச்சரை பதவி விலகுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அழுத்தம் பிரயோகித்து வருகின்றது.
கிழக்கு மாகாண முலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் தொடாந்தும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின், நசீர் அஹமட் பதவி விலகி கட்சியின் வேறு ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும்.
அவ்வாறு இன்றி கிழக்கு முதல்வர் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க முயற்சித்தால் ஜனாதிபதி விரைவில் தீர்மானம் எடுப்பார் என அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved