Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

முஸ்லிம் என்­ப­தால் கிளம்­பிய எதிர்ப்பை ஜனா­தி­ப­தி, பிர­த­மர் தீர்த்தனர் - SLMC நாக­ரி­கமாக நடந்தது

Bublished By Online Ceylon on Thursday, June 2, 2016 | 11:44 AM

கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் முஸ்லிம் என்­ப­த­னா­லேயே எதிர்ப்­புக்கள் கிளம்­பின. இப்­பி­ரச்­சி­னையை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சுமு­க­மாகத் தீர்த்து வைத்­துள்­ளனர் என அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

இதே­வேளை, முத­ல­மைச்­சர்­க­ளுக்கு தடை விதிப்­ப­தற்கு எந்­த­வொரு அமைச்­சுக்கோ அல்­லது படை­யி­ன­ருக்கோ அதி­காரம் கிடை­யாது என்றும் அவர் தெரி­வித்தார். 

வாராந்த அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று புதன்­கி­ழமை அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­ற­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இங்கு உரை­யாற்­றிய அவர்,

முத­ல­மைச்­சரை மக்­களே  தேர்ந்­தெ­டுக்­கின்­றனர். மக்­களின் ஆணை முத­ல­மைச்­ச­ருக்கு கிடைக்­கின்­றது. எனவே முத­ல­மைச்சர் ஒரு­வ­ருக்கு எதி­ராக தடை விதிப்­ப­தற்கு எந்­த­வொரு அமைச்­சுக்கும் படை­யி­ன­ருக்கும் அதி­காரம் கிடை­யாது. 

முத­ல­மைச்சர் பதவி என்­பது மக்­களால் தெரிவு செய்­வ­தாகும். இச்­சம்­பவம் தொடர்­பாக கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் எழுத்து மூலம் மன்­னிப்பு கேட்­டுள்­ள­தோடு கவ­லை­யையும் தெரி­வித்­துள்ளார். 

எனவே படை­யினர் விதித்த தடையை ஜனா­தி­பதி நீக்­கி­யுள்ளார். இவ்­வி­டயம் தொடர்­பாக ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தியே தீர்­மா­னத்தை எடுத்தனர். எனவே இதில்  எந்­த­வி­த­மான பிழையும் இல்லை.

அத்­தோடு கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரின் சம்­பவம் தொடர்பில் அவர் சார்ந்த கட்­சியும் அர­சியல் நாக­ரி­கத்­துடன் நடந்து கொண்­டது
நாம் அதி­காரப் பர­வ­லாக்­கலில் நம்­பிக்­கை­வைத்­த­வர்கள். அதி­காரப் பர­வ­லாக்­கலை வழங்க வேண்டும் என்­பதில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். எனவே அதி­காரப் பர­வ­லாக்­கத்­துக்குள் முத­ல­மைச்­சர்­களின் வகி­பாகம் அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும்.  இப்­பி­ரச்­சினை சுமு­க­மாகத் தீர்க்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் முஸ்லிம் என்­பதால் இச் சம்­ப­வத்தை பெரி­து­ப­டுத்தி பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

சிறு சிறு தவ­றுகள் இடம்­பெ­றலாம். அர­சி­யலில் இது சக­ஜ­மாகும். ஆளு­நரை ஜனா­தி­பதி தான் நியமிப்பார். அதேவேளை முதலமைச்சரை மக்களே தெரிவு செய்கின்றனர். 

கடந்த ஆட்சிக் காலத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகளின் தொப்பி கழற்றப்பட்டு  அவர்களது தலையில் குட்டப்பட்டது. இதன்போதெல்லாம் எவரும் பேசவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை என்றார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved