SEXக்கு மறுத்த மனைவியை 17 தடவை கத்தியால் குத்திய நபர்..!!

பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் உறவுக்கு மறுத்த தனது மனைவியை 17 தடவை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

46 வயதான அன்டோனியோ நேட்டோ எனும் இந்நபர், 26 வயதான தனது மனைவியை இவ்வாறு கத்தியால் குத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

அவசரசேவைப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபின், பிரிட்டனின் கோலிஹர்ஸ்ட் நகரிலுள்ள மேற்படி யுவதியின் வீட்டின் கதவை உடைத்து க்கொண்டு பொலிஸார் உள்ளே புகுந்தபோது, அந்த யுவதி இரத்தம் வழிந்தோடிய நிலையில் நிர்வாணமாக படிகட்டில் வீழ்ந்து கிடந்தார்.

இத்தம்பதியின் ஒரு வயது மகன் படுக்கையில் இருந்தான். அக்குழந்தையின் முகத்திலும் அதன் தாயின் இரத்தம் தெறித்திருந்தது என மென்செஸ்டர் நீதிவான் நீதிமன்றமொன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

தனது மனைவி பாலியல் உறவுக்கு மறுத்ததாலேயே அவரை அன்டோனியோ நேட்டோ இவ்வாறு தாக்கியதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

மேற்படி யுவதி படுகாய மடைந்தபோதிலும் அவர் உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கை விசாரித்த நீதிவான் அன்டோனியோ நேட்டோவுக்கு 12 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.