ரூ. 9 லட்சத்திற்கு அதிக மதிப்புக்கொண்ட உலகின் விலையுர்ந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரூ. 9 லட்சத்திற்கு அதிக மதிப்புக்கொண்ட உலகின் விலையுர்ந்த ஸ்மார்ட்போன் நேற்று லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரூ. 9 லட்சத்திற்கு அதிக மதிப்புக்கொண்ட உலகின் விலையுர்ந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்
லண்டன்:
இஸ்ரேலை சேர்ந்த புதிய நிறுவனமான சிரின் லேப்ஸ், சுமார் ஒன்பது லட்சம் மதிப்பிலான உலகின் அதிக விலை உயர்ந்த சொலாரின் என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தைக் கொண்டது. ராணுவப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் விதமாக உயர்வான பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சொலாரின் போன் குவால்கம் ஸ்நாப்டிராகன் 810 பிராசரை கொண்டு இயங்கும். 23.8 மெகா பிக்சல் பின்பக்க கேமராவுடன், 5.5 அங்குல ஐ.பி.எஸ். எல்.இ.டி. 2,000 ரெசலுஷன் திரையும் கொண்டது.
தங்களது தயாரிப்பு பற்றி செய்தி வெளியிட்டுள்ள சிரின் லேப்ஸ் நிறுவனம் ”மிக உயர்வான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போனுக்கான தேவைதான் சொலாரின் போனை உருவாக்கத்துக்கு காரணம். இதற்காக உலக அளவில் சிறந்த பொருட்களைக் கொண்டு இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.