Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டுள்ளது பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு - அமைச்சர் விஜயமுனி

Bublished By Online Ceylon on Wednesday, June 1, 2016 | 6:30 AM

பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டுள்ளதாக அமைச்சர் விஜயமுனி சொய்சா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சர் விஜயமுனி சொய்சா,
பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு எய்தவர்கள் இருக்க அம்புகளை பிடித்து விசாரிக்கின்றது.
குற்றச் செயல்களை செய்யுமாறு ஏவிய அரசியல்வாதிகளை விட்டு, அதனை மேற்கொண்ட அரசாங்க ஊழியர்களை பிடித்து விசாரித்துக் கொண்டிருக்கின்றது.
அரசியல்வாதிகளை பிடித்து தண்டிப்பதற்கு இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
அதுவும் விசாரணைக்குப் போகும் அனைவரும் போன வேகத்தில் திரும்பி வந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதன் மூலம் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு குற்றவாளிகளை தப்புவித்துக் கொண்டிருப்பதை உணர முடிகின்றது.
அரசாங்க அதிகாரிகளுக்குத் தவறான அழுத்தங்களை வழங்கிய அரசியல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும்.
அரசாங்க அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட உடன் அவர்கள் குற்றவாளிகளாகி விடுவதில்லை.
அவர்களுக்கு பொதுநிர்வாக அமைச்சு அல்லது பொதுச் சேவை ஆணைக்குழு ஆகியவற்றினால் பொறுப்புகள் அல்லது பதவிகளை வழங்க முடியும் என்றும் அமைச்சர் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved