Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பாலியல் தொழிலாளிகளிடம் செல்வோருக்கு ரூ.16 லட்சம் அபராதம் - வருகிறது புதிய சட்டம்

Bublished By Online Ceylon on Saturday, July 16, 2016 | 7:13 AM

தொழிலாளிகளிடம் அடிக்கடி செல்லும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.16 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இத்தாலி நாட்டில் ஓரிடத்தில் நிரந்தரமாக பாலியல் தொழிலை நடத்த சட்டப்பூர்வமாக அனுமதி இல்லை.
ஆனால், சாலை ஓரமாக நின்று வாடிக்கையாளர்களை அழைத்து செல்ல பாலியல் தொழிலாளிகளுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது.
தற்போதுள்ள புள்ளிவிபரத்தில் இத்தாலி முழுவதும் சுமார் 1,20,000 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பாலியல் தொழிலாளிகளிடம் ஆண்டுக்கு சராசரியாக 90,00,000 லட்சம் வாடிக்கையாளர்கள் செல்கின்றனர். இதன் மூலம், பாலியல் தொழில் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் 90 மில்லியன் யூரோ வருமானம் கிடைக்கிறது.
கற்பனை பண்ண முடியாத அளவிற்கு வருமானம் வருவதால், நைஜீரியா, ரோமானியா, அல்பேனியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெண்கள் இறக்குமதி செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு பாலியல் தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், இதனை குறைப்பதற்காக குடியரசு கட்சியை சேர்ந்த கேத்திரினா பினி என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மசோதா ஒன்றை கடந்த புதன் கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மசோதா மூலம் ‘பாலியல் தொழிலாளிகளிடம் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை தவிர அடிக்கடி செல்லும் வாடிக்கையாளர்களுக்கு 2,500 யூரோ முதல் 10,000 யூரோ(16,20,895 இலங்கை ரூபாய்) வரை அபராதம் விதிக்க முடியும்.
இதனை நடைமுறைப்படுத்தினால், பாலியல் தொழிலாளிகளை வாடிக்கையாளர்கள் அடிக்கடி சந்திக்க மாட்டார்கள். இதனால் பாலியல் தொழிலாளிகளின் எண்ணிக்கையும் குறையும்’ என கேத்திரினா பினி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாவிற்கு ஆதரவு பெருகி வருவதால் இச்சட்டம் விரைவில் அமுல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நண்பர்களுக்கு பகிரவும் :





LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved