Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

அரச வைத்­திய அதி­கா­ரிகள் இன்று 4 மணி­நேர வேலை­நி­றுத்தம்

Published on Monday, July 4, 2016 | 10:25 AM

பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து அரச வைத்­தி­யர்கள் இன்று நாட­ளா­விய ரீதியில் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை அடை­யாள வேலை­நி­றுத்தப் போராட்டத்தில் ஈடு­ப­ட­வுள்­ளனர்.
எனினும் மகப்­பேற்று வைத்­தி­ய­சா­லை கள், சிறுவர் வைத்­தி­ய­சா­லைகள், சிறு­நீ­ரக சிகிச்சை மையம், புற்றுநோய் வைத்­தி­ய­சா­லை­கள் மற்றும் அவ­சர சிகிச்சை பிரிவு என்­பன வழ­மைபோல் இயங்கும் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
மாலபே தனியார் கல்­லூரி மாண­வர்­களை வைத்­தி­யர்­க­ளாக உள்­வாங்கக் கூடாது, அரச மருத்­து­வத்­து­றை­யினை பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பது உள்­ளிட்­ட­கோ­ரிக்­கை­களை முன்­வைத்தே வேலை­நி­றுத்தப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.
இத­ன­டிப்­ப­டையில் பல்­ம­ருத்­து­வர்கள், ஆயர்­வேத வைத்­தி­யர்கள், அரச வைத்­தி­யர்கள் உள்­ளிட்ட அனைத்து வைத்­தி­யர்­களும் இன்­றைய தினம் வேலை­நி­றுத்­தத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் அறி­வித்­துள்­ளது.
குறித்த வேலை­நி­றுத்த போராட்டம் தொடர்பில் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் செய­ளாளர் வைத்­தியர் சமந்த ஆனந்த குறிப்­பி­டு­கையில் நாட்டில் தற்­போது வைத்­திய துறையில் பாரிய ஒழுக்­க­யீ­னங்கள் ஏற்­பட்­டுள்­ளன. இந்­தி­யா­வுடன் எட்கா உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­படல் மற்றும் மாலபே தனியார் வைத்­திய கல்­லூ­ரியின் மாண­வர்­களை மருத்­துவ சட்­டத்தின் கீழ் உள்­வாங்க முயற்­சித்தல், வெளி­நாட்டு பயிற்­சி­களை முடித்து வரும் வைத்­தி­யர்­களின் பிள்­ளை­க­ளுக்கு பாட­சாலை வழங்­காமை ; வைத்­திய சேவையில் அர­சியல் தலை­யீ­டுகள் காணப்­ப­டு­கின்­றமை உள்­ளிட்ட பிர­தான 6 கார­ணி­களை முன்­வைத்து நாளை (இன்று) அடை­யாள வேலை­நி­றுத்தப் போராட்­டத்தை மேற்­கொள்­ள­வுள்­ளளோம்.
மாலபே தனியார் கல்­லூரி இலங்­கையின் மருத்­துவ திணைக்­க­ளத்­தினால் இது­வரை அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வில்லை. அத்­தோடு அங்கு கல்வி பயிலும் மாண­வர்கள் மருத்­துவ மாண­வர்­க­ளாக அடை­யாளம் காணப்­பட முடி­யாது. ஏனெனில் அரச மருத்­துவ மாண­வர்­க­ளுக்­கென நடத்­தப்­படும் செயன்­முறை பரீட்­சையை அவர்கள் நடத்­து­வ­தில்லை.
அத்­தோடு முல்­லே­ரியா வைத்­தி­ய­சாலை உள்­ளிட்ட சில அரச வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு வரும் நோயா­ளி­க­ளி­களை மாலபே மருத்­து­வ­கல்வி மாண­வர்­களை கொண்டு செயன்­முறை பரீட்­சை­களை நடத்­து­வ­தாக அறி­கின்றோம். இவ்­வா­றான விட­யங்கள் மிகவும் பார­தூ­ர­மா­ன­வை­யாகும்.
இது­வரைக் காலப்­ப­கு­தியில் இலங்கை மருத்­துவ சபை மாலபே தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு உள்­ளக பயிற்­சி­களை மேற்­கொள்ள அனு­மதி வழங்­க­வில்லை. எனினும் குறித்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் கற்கும் மருத்­துவ மாண­வர்கள் கடு­வெல மற்றும் அவி­சா­வளை வைத்­தி­ய­சா­லை­களில் உள்­ளக பயிற்­சி­களை மேற்­கொள்­ள­மு­டியும் என்று அண்­மையில் சுகா­தார அமைச்சர் அறி­வித்­தி­ருந்தார். இவ்­வா­றான செயற்­பா­டுகள் இல­வச கல்­வியின் உண்­மை­யான தாட்­ப­ரி­யத்­தையே இல்­லாமல் செய்யும் செய­லாகும்.
மேலும் மாலபே மருத்­துவ கல்­லூ­ரிக்கு இலங்கை அர­சினால் அங்­கீ­காரம் வழங்­கப்­ப­ட­வில்லை. அவ்­வா­றெனில் குறித்த தனியார் கல்­லூ­ரி­களில் பயிலும் மாண­வர்­களை வைத்­திய மாண­வர்கள் என எவ்­வாறு கூற முடியும். இல­வச கல்வி, இல­வச மருத்­துவம் என்று நலன்­புரி அர­சாக வெளிக்­காட்­டிக்­கொள்ளும் தேசிய அர­சாங்கம் இன்று கல்­வியை பணத்­திற்­காக விற்று வரு­கின்­றது. இல­வச கல்வி என்­பது இந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யி­னதோ, பிர­த­ம­ரி­னதோ அல்­லது அர­சி­யல்­வா­தி­க­ளு­டைய சொத்­துக்கள் அல்ல. பொது­மக்­களின் உரி­மை­களை பாது­காக்­கவே மால­பேயில் இயங்கும் தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தை மூடு­மாறு தேசிய அர­சாங்­கத்­திடம் கோரு­கின்றோம்.
நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் தொடர்ந்தும் அரச வைத்­திய துறை­யி­ன­ருக்கு பெரும் இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்தி வைத்­திய துறையை சுயா­தீ­ன­மாக இயங்­க­வி­டாமல் தடை செய்­கின்­றனர். பூர­ண­மாக வைத்­திய அறி­வினை பெறா­த­வர்­களை வைத்­தி­யர்­க­ளாக வைத்­திய சட்­டத்தின் மூலம் உள்­வாங்­கு­வ­தனால் நாட்டின் மருத்­து­வத்­து­றைக்கு பெரும் அசௌ­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்தும். அத்­தோடு குறித்த மிலேச்­சத்­த­ன­மான அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களால் மக்­க­ளுக்கு வைத்­திய துறை மீதான நம்­பிக்கை இல்­லாது போவ­தோடு அவர்­க­ளது பாது­காப்­பையும் உறு­தி­ப­டுத்த முடி­யாது போய்­விடும்.
அத்­தோடு இந்­திய இலங்கை சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தம் தொடர்­பிலும் கடந்த காலங்­களில் எமது சங்­கத்தின் நிலைப்­பாட்­டினை தெளி­வாக வெளி­யிட்­டி­ருந்தோம். இந்­நி­லையில் குறித்த ஒப்­பந்­தத்தின் ஊடாக எமது நாட்டின் அடை­யா­ளத்­திற்கும், பிர­ஜை­களின் பாது­காப்­பிற்கும் பாதிப்பு ஏற்­படும் என்­பது உண்மை.. மேலும் தேசிய அர­சாங்­கத்­தினால் இந்த வரு­டத்தில் கைச்­சாத்­தாகும் என எதிர்ப்­பார்க்கும் குறித்த ஒப்­பந்­தத்­திற்கு ஆலோ­சனை வழங்­கு­கின்ற தரப்பும் அதனைத் தயா­ரிக்­கின்ற தரப்பும் அதன் பார­தூ­ரத்­தன்­மையை வெளிப்­ப­டுத்த தவ­றி­யுள்­ளது.
தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள இந்­திய இலங்கை சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தம் மூலம் இலங்­கைக்கு எவ்­வி­த­மான நன்­மையும் இல்லை. குறித்த ஒப்­பந்­தத்­திற்கு ஆலோ­சனை வழங்­கி­ய­வர்­களும், அதனைத் தயா­ரித்­த­வர்­களும் அதற்­கான பொறுப்பை ஏற்­ப­தா­கவும் இல்லை. ஆனால் நஷ்­டத்தை மாத்­திரம் நாட்டு மக்கள் தாங்கிக் கொள்ள வேண்­டி­யுள்­ளது.
குறித்த ஒப்­பந்­தத்தில் உள்ள குறைப்­பாட்டை நிவர்த்தி செய்து கொள்­வ­தற்கு கூட்­டு­நீ­தி­மன்ற விசா­ரணை முறையே பொருத்­த­மா­ன­தாக அமையும். ஆனால் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட இரு­த­ரப்பு ஒப்­பந்­தங்கள் உள்­நாட்டு நீதித்­து­றையின் அதி­கா­ரத்தை மீறிச் செயற்­ப­டு­வ­தாக அமைந்­துள்­ளது.
குறித்த விட­யங்­களை கண்­டித்தும் மருத்­து­வச துறையை பாது­காக்­கவும் நாடு­த­ழு­விய ரீதியில் நாளை (இன்று) வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதற்கமைய அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் குறித்த காலப்பகுதியிலாவது எமது கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமென நினைக்கின்றோம்.
இதேவேளை மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக சிகிச்சை மையம், புற்று நோய் வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என்பன வழமைப்போல் இயங்கும். இந்நிலையில் தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் தொடர் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கவும் எதிர்ப்பார்த்துள்ளோம் என்றார்.
நண்பர்களுக்கு பகிரவும் :

0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved