Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கொழும்பில் 75,000 பேர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யவில்லை

Bublished By Online Ceylon on Friday, July 1, 2016 | 7:19 AM

கொழும்பு மாவட்டத்தில் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு இருப்போர் சுமார் 75,000 பேர் இதுவரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வீடுகளில் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வசிப்போர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வாறு வாடகை வீடுகளில் வசிப்போருக்கு இதற்கான வசதியை செய்து கொடுக்க வேண்டியது வீட்டு உரிமையாளர்களின் கடமை என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த வருடம் முதல் தேர்தல் இடாப்புகளில் பதிவு செய்தல் கட்டாயம் என்றும், இதுவரை நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் வாக்காளர் படிவங்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாக்காளர் படிவங்களை சகல வீடுகளுக்கும் வழங்குவது, நிரப்பப்பட்ட படிவங்களை சேர்ப்பது என்பன கிராம உத்தியோகத்தர்களின் கடமை என்றும் எந்தவொரு கிராம உத்தியோகத்தரும் தமது பொறுப்புகளில் இருந்து தவறும் பட்சத்தில் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved