Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

யுத்த குற்ற விசாரணை – சர்வதேசம் இலங்கையை நெருக்குகிறது : ஜீ.எல்.பீரிஸ் Video

Bublished By Online Ceylon on Wednesday, July 13, 2016 | 7:36 PM

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என சர்வதேசம், அழுத்தம் கொடுத்து வருவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிடுகின்றார்.
இலங்கை அரசாங்கம் தாமாகவே முன்வந்து பல வாக்குறுதிகளை வழங்கி, இலங்கையின் உள்ளகப்பிரச்சினையில் தலையிடுவதற்கான வாய்ப்பினை சர்வதேசத்திற்கு ஏற்படுத்தியமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
‘வற் வரி எவ்வளவு பெரிய குழப்பகரமான ஒன்று என்பதை இந்த நாட்டு மக்கள் தற்போது, நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். அந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் தலையீடு அவசியமாகியுள்ளது. உண்மையில் இன்று நாட்டில் அரசாங்கம் என்று ஒன்று, இல்லாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் பொருளாதார கொள்கை இப்படியாக இருக்கின்றது.
இதனைத் தவிர, இந்த நாட்டின் வெளிவிவகார கொள்கையும் திருப்திகரமானதாக இல்லை. சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் துணை அமைச்சர் ஹூயூகோ சுவயர் (Hugo Swire) பிரித்தானிய நாடாளுமன்றில் இலங்கைத் தொடர்பில் ஒரு விசேட உரையினை ஆற்றியிருந்தார்.
அந்த உரையில் அவர், இலங்கை அரசாங்கமானது விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவது, ஐ.நா மனித உரிமை பேரவைக்கு சில அதிகாரங்களை வழங்குதல், உள்ளிட்ட  கண்காணிப்பதற்கான அதிகாரத்தை இலங்கை தானாகவே வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை, இலங்கை நிறைவேற்ற வேண்டும். அந்த வாக்குறுதிகளை மீற முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்படும் சகல நிதி உதவிகளையும் நிறுத்துமாறு, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெரியிடம் எழுத்து மூலம் கோரியுள்ளனர்.
அதேபோல், உலக நாடுகளுக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நழுவ முடியாது என்று ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் ஹூசைன் கூறியுள்ளார்.
இதன் மூலம் இந்த அரசாங்கம் எதனைச் செய்துள்ளது. இலங்கையின் உள்ளகப்பிரச்சினைகளில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தவற்கு, சர்வதேச நாடுகளுக்கு தகவுகளைத் திறந்து கொடுத்துள்ளது.’ என்றும் கூறினார்.
Video

நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved