Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மஸ்ஜிதுன் நபவி அருகில் தற்கொலைத் தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு

Bublished By Online Ceylon on Tuesday, July 5, 2016 | 4:37 AM

மதீனா மஸ்ஜிதுன் நபவி (முஹம்மது நபி பள்ளிவாசல்) க்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் இது வரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரு செய்திகள் தெரிவிக்கின்றன.
மஸ்ஜிதுன் நபவிக்கு அருகே உள்ள பாதுகாப்புத் தலைமையகத்திற்கு வெகு அருகே தற்கொலை குண்டுதாரி ஒரு குண்டை வெடிக்கச் செய்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
இது வரை ஆறு பேர் பலியாயுள்ளதாகவும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த சம்பவம், கிழக்கு பகுதி நகரான கத்திஃப் நகரில் உள்ள ஒரு ஷியா மசூதிக்கு அருகே தற்கொலை குண்டு ஒன்று வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து வருகிறது.
அந்த சம்பவத்தில் குண்டுதாரி மட்டுமே கொல்லப்பட்டார் வேறு எந்த உயிர்ச்சேதமும் விளையவில்லை.
நேற்று திங்கட்கிழமை முன்னதாக, ஜெட்டா நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகே நடந்த மற்றொரு தற்கொலை குண்டு தாக்குதலில் இரண்டு பாதுகாப்பு காவலர்கள் காயமடைந்தனர்.தற்கொலை குண்டுதாரி கொல்லப்பட்டார்.
அந்தத் தாக்குதல் அமெரிக்க சுதந்திர தினத்தின் அதிகாலை நேரத்தில் நடந்தது.


நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved