Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பொது பல சேனாவின் கள்ளத் தொடர்பு அம்பலம் – புலனாய்வுத் தகவல்கள்

Published on Monday, July 4, 2016 | 9:49 AM

நோர்வே பின்னணியையும் விடுதலை புலிகளுடனான கள்ளத்தொடர்பையும் டிலந்த விதானகே வெளிப்படுத்தினார் : டிலந்த சொல்லாத கதைகளை லங்கா ஈ நியூஸ் வெளிச்சதிற்கு கொண்டுவருகிறது.
(லங்கா ஈ நியூஸ் – தமிழில் ஏ எம் எம் முஸம்மில் )
பொது பல சேனா என்பது நோர்வேயின் ஒரு மரைகரம் என்பதை அதன் முக்கியஸ்தர்களில் ஒருவரான டிலந்த விதானகேயினால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஏசியன் ட்ரிபியூன் இணையதளத்துக்கு அவர் வழங்கிய பேட்டியொன்றின் போதே அவர் வாயினாலேயே இது வெளிவந்துள்ளது .அவரின் கூற்று படி பொது பல சேனா நிருவப்படுமுன் கல கொட அத்தே ஞானசார உட்பட பிக்குகளுடன் டிலந்த நோர்வே நாட்டில் சுற்றுபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறிப்பிட்ட பேட்டியில் வெளி வந்த விடங்களை கூறுமுன் டிலந்தவினால் வெளியிடப்படாத பல உண்மைகள.
இதோ அந்த உண்மைகள்………………. 
“பொது பல சேனா“வுக்கு நோர்வேயின் “ நோர்ஜெஸ் கொடேம்ப்ளார் அன்டோம்ஸ் போபன்ட்” எனும் நோர்வேயின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் மூலமே நிதி வழங்கப்பட்டுள்ளது. நோர்வே கோட்டம்பளர் யூத் அசோசியசன் என்பது அதன் ஆங்கிலப் பெயராகும். சமயங்களை விட்டு தூரமாகும் இளைஞர்களை நேர்வழிப் படுத்துவது இந் நிறுவனத்தின் நோக்கமாக கூறப்படுகின்றது.
இவ்வியக்கமானது ஆயிரத்தி எண்நூறுகளில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பின்னொரு காலத்தில் இவ்வியக்கம் அமெரிக்க அணி , நோர்வே அணி என இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதன் நோர்வே அணி 1967 காலப்பகுதியிலேயே நிவாரண நிதியுதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கைக்கு வந்துள்ளதுடன், வடக்கில், படகு உற்பத்தி செய்யும் அரச சார்பற்ற நிறுவனமான “‘சீ நோர்” நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். மீன் பிடி கைதொழிலில் ஈடுபடும் பெருந்தொகையானவர்கள் இலங்கையின் தெற்கில் இருக்கும் போது அந்த காலத்தில் இது போன்றதொரு அரச சார்பற்ற நிறுவனமொன்றை வடக்கில் நிறுவதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. எவ்வாறாயினும் இலங்கையின் வடக்கிலுள்ள இளைஞர்கள் தனி நாடு கோரி ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது குறிப்பிட்ட இக்காலப்பகுதிக்கு சற்று பிந்திய காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிட் காலத்தில் இலங்கை அரசாங்கத்தால் இந்த “சீ நோர்” நிறுவனத்தை சுவீகரிக்கப் பட்டது.
1967 களில் “சீ நோர்” நிறுவனத்தை ஆரம்பித்து வைப்பதற்காக “அர்னி பியோடோப்” என்றொரு நபர் இலங்கைக்கு வருவதுடன் இன்று வரை இந் நாட்டில் திரை மறைவில் செயற்படுகிறார். எவ்வாறாயினும் பிட் காலத்தில் மேட்கூறிய “ நோர்ஜெஸ் கொடேம்ப்ளார் அன்டோம்ஸ் போபன்ட்” எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதியுதவியில் இயங்கும் தற்போதைய “யங் ஏசியா டெலிவிஷன்“ எனும் இன்னுமொரு அரச சார்பற்ற நிறுவனத்தை ஆரம்பிப்பதுடன் அதில் டிலந்த விதானகேயும் இணைந்து செயல்பட்டு இவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்கிறார்.
அதை தொடர்ந்து பிற்காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக “அர்னி பியோடோப்” இவ்வமைப்பிலிருந்து விலகிசெல்கிறார் .அவருடன் சேர்ந்து டிலந்த விதானகேயும் விலகிசெல்கிறார். இந் நிகழ்வுடன் டிலந்த விதானகே, நோர்வே நிதிவழங்குனரான “அர்னி பியோடோபின் விசுவாசதிட்குரிய நண்பராகிறார்.
ரசியாவில் கல்வி பயின்றவரான டிலந்த விதானகே எவ்வழியிலேனும் நிதிவழங்குனர்களை தேடி பெற்று திட்டங்களை (project) தயாரித்து பணம் சம்பாதிக்கும் வழக்கமுடையவாரவார். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் ஆரமிபிக்கபட்ட “தேசிய இளைஞர் சேவை சபை” இவர் முதலில் நிறுவிய அமைப்பாகும். இளைஞர்களுக்கு கணணி அறிவை வழங்கும் நோக்கில் என்று கூறிக்கொண்டு ஆரம்பித்த, குறிப்பிட்ட இந் நிகழ்ச்சி திட்டதிற்கான பண ஒதுக்கீடுகள் தீர்ந்து போனதுடன் இடை நடுவில் கைவிடப்பட்டது.
எவ்வாறாயினும் டிலந்த விதானகே “யங் ஏசியா டெலிவிஷன் ” நிறுவனத்திலிருந்து அர்னி பியோடோபுடன் வெளியேற்ற பட்டபின் நேர காலத்துடன் “ பொது பல சேனா “ அமைப்பை நிர்மாணிப்பதற்கான நிதி வசதிகளை நோர்வே நாட்டிலிருந்து பெற்றிருப்பதுடன், பணத்திற்காக எதையும் செய்யும் இவர் நோர்வே பணத்துடன் கோதபாயவின் பாதுகாப்பு இரகசிய கணக்கிலிருந்தும் பணத்தை பெற்றுள்ளார்.
இவர்கள் L T T E இனருடன் நோர்வேயிலும் ,சுவீடனிலும்,பிரான்சிலும் பல சந்திப்புகளை ஏற்படுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பொது பல சேனா காரர்கள் இலங்கையிலிருந்துகொண்டு விடுதலைபுலிகளுக்கு எதிராக கூகுரலிட்டாலும் ஐரோப்பாவில் பூனைகுட்டிகலாக மாறியுள்ளனர். நோர்வே விஜயத்தின் போது எந்த ஒரு பன்சலைக்கும் செல்லாத இவர்கள் விடுதலைபுலிகளின் தலைவர்களை சந்தித்ததாக டிலந்த விதானகேயின் ஒப்புதல் வாக்குமூலம் நிரூபித்துள்ளது . இவ்விடயம் டிலந்த விதானகே யினால் ஏசியன் ட்ரிபியூன் க்கு வழங்கப்பட்ட பேட்டியின் வெளிவந்துள்ளது . குறிப்பிட்ட பேட்டியில் வெளிக்கொணரப்பட்ட உண்மைகளை கீழே காணலாம் .
ஏசியன் ட்ரிபியூன் :- அர்னி பியோடோப் அவர்களை பற்றி இன்னும் ஒரு விடயத்தை உங்களிடம் கேட்க வேண்டும். கொழும்பிலுள்ள நோர்வே உயர்ஸ்தானிகர் காரியாலயத்தினூடாக உங்ககளுக்கு நிதியுதவிகள் வழங்கப்படுகின்றதா ?, மேலும் நோர்வே உயர்ஸ்தானிகருடன் அர்னி பியோடோப் அவர்களும் தும்முள்ள சந்தியிலமைந்துள்ள உங்களின் காரியாலயதிட்கு வந்துபோவதன் நோக்கம் என்ன ?, மேலும் பிக்குமார்கள் ஐவருடன் நீங்களும் சென்ற உங்களின் நோர்வே பயணம் பற்றியும் நீங்கள் கூறவேண்டும், இவ்விடயங்கள் பற்றி ஆசாத் சாலி அவர்கள் மக்ஸ் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் உங்களிடம் வினா எழுப்பியிருந்தாலும் நீங்கள் அதற்கு தெளிவாக பதிலிக்க வில்லை என்பதே எனது நிலைப்பாடாகும் .
டிலந்த :- கேள்விகுக்கு நான் தகுந்த பதிலளித்துள்ளேன் . 
ஏசியன் ட்ரிபியூன் :- நீங்கள் கூறிய பதில் என்ன ?. நோர்வே பயணம் சென்ற பிக்குகள் ஐவரும் யாவர் ?.
டிலந்த :- என்னால அதை கூற முடியும். எனது நினைவு படி 2010 ல் தான் அது நிகழ்ந்தது .
ஏசியன் ட்ரிபியூன் :- இல்லை இல்லை 2011 அக்டோபரில் தான் அது நிகழ்ந்தது 
டிலந்த :- எனக்கு எனது பாஸ்போட்டை பார்க்க வேண்டும் ,எனக்கு சரியாக நினைவில்லை .2011 அக்டோபராக இருக்கலாம் ஆனால 2012 ஆக இருக்க முடியாது.. என்னால் நிச்சயித்து கூறலாம் நோர்வே விஜயத்திற்கு பின் 2012 மே மாதத்திலேயே நாங்கள் பொது பல சேனாவை ஸ்தாபித்தோம் . 
ஏசியன் ட்ரிபியூன் :- நோர்வே சென்ற குழுவில் நீங்களும் ஒரு அங்கத்தவராக இருந்தீர்களா ?
டிலந்த :- ஆம் நானும் சென்றேன் . நோர்வே சென்ற ஏனையவர்களின் பெயர் பட்டியலையும் என்னால் தர முடியும் . அவர்களின் பெயர்கள்………. , 
1 கல கொட அத்தே ஞானசார தேரோ 
2 விதாரன்தெனியே நந்த தேரோ 
3 அழுத்வெவ நந்த தேரோ 
4 ஏபனே சுமனவன்ச தேரோ 
5 வெளிமட ஷாந்த தேரோ
ஆகியோருடன் , பூஜித விஜேசிங்க, மார்க் அன்டனி பெரேரா ஆகியோராகும். இவர்கள் அப்போதைக்கு போதுபல செனாவினராக இருக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் வெவேறு இயக்கங்களின் உறுப்பினர்களாகவே இருந்தார்கள் . பொது பல சேனா அப்போதைக்கு உருவாகப்பட்டிருக்கவில்லை .
ஏசியன் ட்ரிபியூன் :- அப்போ உங்களுடன் இவர்கள் எட்டு பேர்தான் நோர்வே பயணத்தில் இணைந்து கொண்டவர்கள் . சரி நோர்வே சென்று நீங்கள் செய்த வேலைகள் என்ன ?
டிலந்த :- சர்வதேச இயக்கமொன்றின் ( பன்னாட்டு நிறுவனம் ) அனுசரனையூடாகவே நாங்கள் நோர்வே சென்றோம் . அது ஒரு நோர்வே இயக்கம். சரியாக எனக்கு ஞாபகம் இல்லை . (“ நோர்ஜெஸ் கொடேம்ப்ளார் அன்டோம்ஸ் போபன்ட்” என்ற நிறுவனத்தின் பெயரை மறைக்கின்றார் என்பதை அவதானிக்கவும் )
நாங்கள் அங்கிருந்த சில தமிழ் சகோதரர்களை சந்தித்தோம் அவர்களுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தினோம் .இவர்கள் தமிழ் டயஸ்போராவை சேர்ந்தவர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்க வில்லை . எங்களை சந்தித்த சிலர் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்க வில்லை . முனாள் நோர்வேயின் அமைச்சராக கடமையாற்றிய எரிக் சொல்ஹைம் அவர்களுடனும் ஓர் சந்திப்பு நடைபெற்றது. சமூக சேவை இயக்கங்கள் பலவற்றின் செயற்பாடுகளை அவாதானிப்பதற்காகவும் சென்றிருந்தோம், நோர்வேயின் பாராளுமன்றத்தை பார்வையிட்டோம். மேலும் நண்பர்கள் சிலரின் வீடுகளுக்கும் சென்றிருந்தோம் .
ஏசியன் ட்ரிபியூன் :- அர்னி பியோடோப் அவர்கள் உங்களின் பயணத்தில் இணைந்திருந்தாரா ?
டிலந்த :- பயணத்தில் இணைந்திருக்காவிட்டாலும் நோர்வேயில் வைத்து நாங்கள் அவரை சந்தித்தோம் . 
ஏசியன் ட்ரிபியூன் :- நோர்வே விஜயதிட்காக உங்களை அழைக்க விஷேட காரணங்கள் ஏதும் உண்டா ?
டிலந்த :- தீவிர வாத இயக்கங்கள் (extreme groups) இரண்டுடன் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்காக. 
ஏசியன் ட்ரிபியூன் :- தீவிரவாத இயக்கங்கள் (extreme groups) என்று நீங்கள் எதை கருதுகின்றீர்கள்.?
டிலந்த :- தமிழ் டயஸ் போராவுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள .உதாரணமாக ஞானசார தேரோ அவர்கள் பிரபலமான சிங்கள அமைபொன்றை பிரதிநிதிதுவபடுதினார்கள். இதற்கு முன்பு எங்களுக்கு மத்தியில் இத்தகையதொரு புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கவில்லை. காணி பிரச்சினைகள், அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் போன்ற பல பிரச்சினைகள் விடயமாக நாங்கள் கலந்துரையாடினோம்
(ஆரம்பத்தில் தமிழ் டயஸ் போராவினர் தங்களை சந்திக்கவந்தது பற்றி அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டதை அவதானிக்கவும் ) 
ஏசியன் ட்ரிபியூன் :- உங்களின் குழு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தியதா அல்லது பிக்குகள் அவர்களின் இயக்கங்களை பிரதிநிதித்துவப் படுத்திநார்களா? இல்லாவிடின் தனிப்பட்டவகையில் அவரவர்களின் கருத்துகளை பிரதிநிதிதுவபடுதினார்களா ?
டிலந்த :- நானும் ,பூஜித விஜேசிங்க அவர்களும் மொழி பெயர்பாளர்களாகவே கலந்துகொண்டிருந்தோம் . ஆனாலும் பிக்குகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்கங்களை பிரதிநிதிதுவதபடுத்தியே இக்குழுவுக்கு தெரிவு செய்திருந்தோம். 
ஏசியன் ட்ரிபியூன் :- இந்த நோர்வே பயணத்தை ஏற்பாடு பண்ணியது யார் ?.
டிலந்த :- அர்னி பியோடோப் அவர்களுடன் இணைந்து நான் தான் இப்பயணத்தை ஏற்பாடுசெய்தேன். 
ஏசியன் ட்ரிபியூன் :- நோர்வே உயர் ஸ்தானிகர் காரியாலயம் இப்பயணதிற்கு நிதி உதவிகளை வழங்கியதா ?
டிலந்த :- இல்லை. நான் நினைக்கவில்லை எங்களின் முழுப் பயண செலவையும் நோர்வே உயர் ஸ்தானிகர் காரியாலயம் ஏற்பாடு செய்ததென்று என்னால் கூற முடியாது. 
ஏசியன் ட்ரிபியூன் :- ஆனால் அர்னி பியோடோப் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் நோர்வே உயர் ஸ்தானிகர் காரியாலயமும் பயண செலவை ஏற்பாடு செய்ததென்று.? அத்துடன் நான் கூறுகின்றேன் இப் பயணத்திற்காக அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் அனுமதியையம் நீங்கள் பெற்றிருந்தீர்கள் என்று . 
.
டிலந்த :- இல்லை அவருடன் எந்த கொடுக்கல் வாங்கலும் எங்களுக்கில்லை .நான் இதுபற்றி எதையும் அறிந்திருக்கவில்லை. 
ஏசியன் ட்ரிபியூன் :- நீங்கள் எதனை நாட்கள் நோர்வேயில் தங்கியிருந்தீர்கள் ?
டிலந்த :- சரியாக ஞாபகமில்லை .நோர்வேயில் எழு நாட்களும் , ஸ்வீடனில் ஒருநாளும் இருந்திருப்போம் .
ஏசியன் ட்ரிபியூன் :- நீங்கள் ஸ்வீடனில் யாரை சந்தித்தீர்கள் ?
டிலந்த :- ஸ்வீடனில் நாங்கள் தமிழ் டயஸ் போராவை சந்தித்தோம்,சிவில் சமூக செயட்பாட்டாலர்களை சந்தித்தோம் கலாசார நிகழ்சிகள் சிலதிலும் பங்கு பற்றினோம் .
ஏசியன் ட்ரிபியூன் :- எங்கே ……?
டிலந்த :- சரியாக என்னால் குறிப்பிட முடியாது . ஆனால் ஸ்வீடன் நாட்டின் எல்லை நகரமொன்றில் என்று கூறலாம். அங்கே இசை நிகழ்ச்சியொன்றும் . பண பாராயணம் நிகழ்வொன்றும் நடைபெற்றது.
ஏசியன் ட்ரிபியூன் :- நீங்கள் ஸ்வீடனில் பன்சலைகளுக்கு சென்று (விகாரை) பூஜை புனஸ்காரங்கள் செய்தீர்களா?
டிலந்த :- எங்களுக்கு நேரம் அதற்கு இடமளிக்க வில்லை .
ஏசியன் ட்ரிபியூன் :- நீங்கள் ஸ்வீடனில் இலங்கை உயர் ஸ்தானிகர் காரியாலயதிட்கு சென்றீர்களா ? 
டிலந்த :- அங்கு செல்வதற்கு எங்களால் முடியாமல் போனது.
ஏசியன் ட்ரிபியூன் :- நோர்வேயில் இருக்கும் போதாவது இலங்கை உயர் ஸ்தானிகர் காரியாலயதிட்கு சென்றீர்களா?
டிலந்த :- இல்லை நாங்கள் ஒஸ்லோ விற்கு சென்ற உடனேயே எங்களை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றார்கள். கடைசி தினத்திலும் கூட ஒஸ்லோவிலிருந்து பாரிஸ் நோக்கி புறபட்டு விட்டோம்.
ஏசியன் ட்ரிபியூன் :- கடைசி தினத்தில் நீங்கள் எரிக் சோல்ஹைமை சந்தித்தீர்களா ? 
டிலந்த ;- ஆம் கடைசி தினத்தில் தான் நாங்கள் எரிக் சோல்ஹைமுடனான சந்திப்பு எட்பாடு செய்யப்படிருன்தது. 
ஏசியன் ட்ரிபியூன் :- பாரிசிலிருந்து நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னவென்று கூறமுடியுமா?
டிலந்த :- சந்திப்புகள் சிலதை மேற்கொண்டதுடன் விஹாரையொ ன்றுக்கும் சென்றோம் . .
இந்த பேட்டியை நோக்கும் போது பொது பல சேனாவின் பொய் பகட்டுக்காக அணிந்திருந்த நாட்டுப்பற்று, தேசியவாதம், இனப்பற்று ஆகிய போலி ஆடைகள் களைய பட்டுள்ளதையும் அவர்களின் உண்மையான நிர்வாணம் வேளிப்பட்டுள்ளதையும் அறியலாம் . டிலந்த இவ்வுண்மைகளை வெளிப்படுத்துவதற்கான காரணங்கள் என்ன ? என்று ஆராய்ந்து பார்த்தல் ,,, பொது பல சேனா தற்போது பாரியதொரு உட்பிளவுக்கு உள்ளாகியுள்ளதை அறிய முடிகிறது . இது விடயமாக ஞானசார அவர்கள் கூறியுள்ளதாவது “ தமது இயக்கத்திற்குள் இருவேறு பிரிவுகள் செயற்படுவதாகவும், ஒரு பிரிவு டிலந்த சார்பான பிரிவாகவும் மற்றையது ஞானசார பிரிவாகவும் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு ஞானசார அணி அமெரிக்க விஜயத்தில் ஈடுபட்டிருப்பது ஆரம்பத்தில் நிதியுதவியளித்த “ நோர்ஜெஸ் கொடேம்ப்ளார் அன்டோம்ஸ் போபன்ட்” என்ற என் ,ஜீ ஓ விலிருந்து பிரிந்து சென்ற அமெரிக்க பிரிவினர் மூலம் நிதியுதவிகளை பெருவதட்காகும் .அந்த பிரிவு இப்போது “சன்ஸ் ஒப் டேம்பரன்ஸ்” என்று அழைக்கபடுகின்றது
நண்பர்களுக்கு பகிரவும் :

0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved