Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

துருக்கி இராணுவப் புரட்சி படு தோழ்வியில் முடிவு

Bublished By Online Ceylon on Saturday, July 16, 2016 | 10:58 AM

துருக்கியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக துருக்கி உள்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
அங்காராவில் ரோந்து வரும் அனைத்து இராணுவ ஹெலிகொப்டர்களும் சுட்டு வீழ்த்தப்படும் என துருக்கி பிரதமர் பினலி யில்த்ரிம் எச்சரித்துள்ளார்.
சதி புரட்சியாளர்களால் கைது செய்து வைத்திருந்த இராணுவத் தலைமை தளபதி விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் உளவுத் துறை அறிவித்துள்ளது.
சதிப் புரட்சியில் ஈடுபட்ட இராணுவத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இஸ்தான்பூலின் பாதிஹ் பகுதியில் சதி புரட்சியில் ஈடுபட்ட இராணுவ தரப்புக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் நடைபெறுவதாகவும், புரட்சி தோல்வியை நோக்கி செல்வதாகவும் துருக்கி முழுவதும் அர்தூகானுக்கு ஆதரவாக மக்கள் வீதிக்கு வந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சதி புரட்சியை திட்டமிட்டவர் இராணுவ தளபதி ஆலோசகர் கேர்ணல் முஹர்ரம் கோஷா என்று தகவல் வெளியாகியுள்ளது.
சதி புரட்சி தோல்வியடைந்ததை TRT தொலைக்காட்சி ஊழியர்கள் கொண்டாடுவதாகவும் அதன் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பியதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன..

நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved