வாகனங்களுக்கான டயர்களைக் கூட அரசாங்கம் வழங்கவில்லை – மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் தமது வாகனங்களுக்கான டயர்களைக் கூட வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று மஹிந்தவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கம் எனக்கு உத்தியோகபூர்வ இல்லம், குண்டு துளைக்காத வாகனம் போன்றன அன்றி வாகனங்களுக்கு டயர்களைக் கூட வழங்கவில்லை.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கவனம் செலுத்துவார்கள் என நான் நம்புகின்றேன்.
பழுதடைந்துள்ள எனது ஜீப் வண்டி இன்னமும் திருத்தியமைக்கப்படவில்லை.பழுதுபார்ப்பதற்கு ஏன் கால தாமதம் ஏற்படுகின்றது என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
புதிய கட்சி அமைப்பது குறித்த கேள்விக்கு காலம் பதில் சொல்லும்.
முதலில் மக்களை திரட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.