Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

சி.வி.கே.சிவாஞானத்தின் வாகன சாரதியால் நிர்க்கெதியாக நிற்கும் பெண் பொலிஸ்: நடந்தது என்ன? (நீதி வேண்டி ஒரு பதிவு)

Published on Monday, July 11, 2016 | 5:45 PM

வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவாஞானத்தின் வாகன சாரதியால் காதலித்து ஏமாற்றப்பட்ட பெண் பொலிஸ், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்பு போன்றவற்றினால் கைவிடப்பட்ட நிலையில் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளார்.
இப் பெண்ணுக்காக நியாயம் கேட்க வேண்டியவர்கள் இவ்விடயத்தில் மௌனமாகவும், நாசுக்காக சில வேலைகளை செய்து வருகின்றதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
நெல்லியடிப் பகுதியினைச் சேர்ந்த குறித்த பெண்ணுடன் வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் சாரதி மிக நீண்ட காலமாக காதல் தொடர்பு கொண்டுள்ளார். இவர்களுடைய காதல் விவகாரம் இரு வீட்டாருக்குத் தெரியவந்த நிலையில் சி.வி.கே.சிவஞானமும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதனால் இருவரும் சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டில் வழமையாக சந்திப்பது வழமையாகவும் இருந்துள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டு திருமணம் ஒன்று சி.வி.கே.சிவஞானத்தின் சாரதிக்கு பேசியதை அடுத்து அந்தப் பெண்னை மொத்தமாக கைவிட்டள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சி.வி.கே.சிவஞானத்திற்கு அந்த பெண்ணால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இருந்த போதும் 3 இலட்சம் ரூபா பணத்தினை வாங்கிக் கொண்டு ஒதுங்கிச் செல்லுமாறு சி.வி.கே.சிவஞாமும் அவருடைய மனைவியும் கூறியுள்ளனர்.
அவர்களிடம் கூறி பயணில்லை என்று தெரிந்ததும் அப் பெண் இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையம், சிறுவர், பெண்கள் பிரிவு , யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்பு போன்றவற்றில் தனக்கு நடந்த கொடுமைகள் தொர்பாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இருந்த போதும் அந்தப் பெண் செய்த எந்த முறைப்பாடும் இதுவரையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. பொலிஸார் விசாரணைகள் மேற்கொள்ளுகின்றார்கள் என்ற காரணத்தினால் இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்கழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு என்பற்றிலும் பொலிஸாருக்கு எதிராக அவர் செய்யவிருந்த முறைப்பாட்டினை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் சகல தரப்பினர்களாலும் அந்தப் பெண் புறந்தள்ளப்பட்ட நிலையில் நீதி கேட்டு எமது இணையத்தளத்துடன் தொடர்பு கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கான நீதி கிடைக்கும்வரை எமது இணையத்தளத்தின் பார்வை இவ்விடயம் தொடர்பாக பதிந்திருக்கும்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved