Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

காணாமல் போன விமானத்தைப் பற்றி Full Update

Bublished By Online Ceylon on Sunday, July 24, 2016 | 6:18 AM

காணாமல் போன ஏ.என்.32 ரக விமானங்கள் உலகம் முழுவதும் 11 நாடுகளின் இராணுவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அன்டனோவ் நிறுவனத்தால் இந்த விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தொடர்ச்சியாக 4 மணி நேரம் 15 நிமிஷங்கள் பயணிக்கக் கூடியது.
இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஈராக், கொலம்பியா, மெக்சிக்கோ, பெரு, சூடான், அங்கோலா உள்ளிட்ட 11 நாடுகளின் இராணுவத்தில் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றில், அதிகபட்சமாக இந்தியாவிடம் 101 ஏ.என். 32 ரக விமானங்கள் உள்ளன.
காணாமல் போன விமானத்தின் நீளம் 23.68 மீட்டர், அகலம் 29.20 மீட்டர். எடை 27 டன். மணிக்கு 540 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது.
இராணுவ வீரர்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு விரைவாக கொண்டு செல்லவும், சரக்குகளை எடுத்துச் செல்லவும், மருத்துவ உதவிக்காகவும், பாராசூட் படையினரை கொண்டு செல்லவும், பொருள்களை வானிலிருந்து தரையில் உள்ளவர்களுக்கு பாராசூட் மூலம் கொடுக்கவும், மிக முக்கிய நபர்களின் பயணங்களுக்கும், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கும் இந்த ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
1984ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படை இந்த ரக விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி அருணாசல பிரதேச மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இந்த ரக விமானம் முதல் முறையாக விபத்துக்குள்ளானது. அதில், 13 பேர் உயிரிழந்தனர்.
இப்போது விபத்துக்குள்ளானது இரண்டாவது முறையாகும். சூலூர் விமானப் படைத் தளத்தில், இந்த ரக விமானங்கள் 4 அல்லது 5 விமானங்கள் உள்ளதாகத் தெரிகிறது.
இந்த வகை விமானங்களை இயக்க நன்கு பயிற்சிபெற்ற விமானிகள் சூலூர் விமானப் படைத் தளத்தில் உள்ளனர்.
வழக்கமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் சூலூரிலிருந்து அந்தமான் விமானப் படைத் தளத்துக்கு தாம்பரம் வழியாகப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.
இந்த வெள்ளிக்கிழமையும் காலை 6.45 மணிக்கு சூலூர் விமானப் படைத் தளத்திலிருந்து ஐந்து பேருடன் தாம்பரம் சென்ற விமானம் அங்கிருந்து புறப்பட்டு அந்தமான் செல்லும் வழியில் மாயமானது.
விடுமுறையில் தமிழகம் வரும் வீரர்கள் மற்றும் படைத் தளத்தில் பணிக்குச் செல்வோரும் இந்த விமானத்தில் பயணிப்பர்.
காணாமல் போன விமானியின் குடும்பத்தினர் சூலூர் விமானப் படைத் தள குடியிருப்பில் வசிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்தை தேடும் பணியில் 7 விமானங்கள், 8 கப்பல்களுடன் இந்திய கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல்போன விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
விமானம் காலை 8.30 மணியளவில் தளத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்ட நேரத்தில் இருந்து 16 நிமிஷங்கள் வரை கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பில் இருந்தது.
அதுவரை ரேடாரின் கண்காணிப்பிலும் விமானம் இருந்துள்ளது. அதன் பின்னர் விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ரேடாரின் கண்காணிப்பில் இருந்தும் விமானம் மறைந்துவிட்டது.
விமானம் பறக்கத் தொடங்கிய 42-வது நிமிஷத்தில்தான் அது காணாமல் போயிருப்பதை விமானப்படை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உறுதி செய்தனர். உடனே அவர்கள், அந்த தகவலை விமானப்படை உயர் அதிகாரிகளிடமும், பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் தெரிவித்தனர்.
இதையடுத்து மாயமான விமானத்தைத் தேடும் பணியில் இந்திய கடலோர காவல்படையின் 3 டார்னியர் விமானங்களும், சாகர், சமுத்திரா பஹரேதார் ஆகிய இரு கப்பல்களும் உடனடியாக ஈடுபடுத்தப்பட்டன.
இந்த விமானம் பறந்தபோது கடைசியாக அளித்த சிக்னலின் அடிப்படையிலும், விமானம் பறந்த வேகத்தின் அடிப்படையிலும் சென்னையில் இருந்து சுமார் 125 நாட்டிகல் மைல் தொலைவில் இருந்து 151 நாட்டிகல் மைல் ( ஒரு கடல் மைல் என்பது 1.85 கி.மீ. ஆகும்.) வரையிலான தொலைவில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் விமானம் காலை 9.12 மணியில் இருந்து 9.15 மணிக்குள் 23,000அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று விமானப் படை அதிகாரிகள் கருதுகின்றனர்.
விமானத்தைத் தேடும் பணியில் விமானப்படையினர், கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள், கடற்படைக்கு சொந்தமான கார்முக், காரியல், ஜோதி, குதார் ஆகிய 4 கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல் உள்பட 7 விமானங்கள், 8 கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானப்படை விமானம் இயந்திர கோளாறு ஏற்பட்டு விபத்தில் சிக்கியதா அல்லது மோசமான வானிலை காரணமாக கடலில் விழுந்ததா அல்லது விமானியின் தவறால் விபத்து ஏற்பட்டதா என்ற விவரம் விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தால் தான் தெரிய வரும் என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- Dina Mani
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved