Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

தேர்தல் அறிவிக்கப்பட்ட(?) நிலையில் K.A.பாயிஸ் பற்றி புத்தளம் ஊடகவியலாளரின் கருத்து

Published on Friday, July 15, 2016 | 7:51 AM

பக்கசார்பான பதிவு அல்ல பொதுவான பதிவு...
K.A.B டா நெருப்புடா.... புகழ் பாடுவதை நிறுத்துங்களுவோ...
K.A.B இல்லா புத்தளம் புஷ்வானமாய் போனது அனைவரும் அறிந்ததே! இதை யாராலும் மறுக்க முடியாது. மனதில் கோபம் தாபங்கள் இருந்தாலும் அதை இன்று அனுபவிக்கும் அரசியல் மற்றும் அரசியல் அல்லாத பாமரர்களுக்கு நன்றாகவே புரியும்.
தவறு இழைக்காத மனிதன் எங்கே இருக்கின்றான் ஏன் என்னை கூட சொல்ல முடியாது அது போலதான் K.A.B யும் தவறு இழைத்தாலும் அரசியலில் நன்றாகவே ஊறியவர்.
அவர் செய்யாத சேவை என்ன? என்று கேட்பதை விட அவர் செய்த சேவைகளையும் மறுக்க முடியாது...
கடந்த அரசியல்வாதிகளின் சேவைகளில் எமக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போன வளங்கள் அனைத்தையும் பெற்று தந்த தந்தை யார் ( தவரே இழைத்து இருந்தாலும் கூட) நன்றி கெட்ட பாமரர்களே!
01. OPEN UNIVERSITY
02. SCIENCE COLLEGE 
03. LIBRARY
04. BUS STAND
05. STADIUM
06. GYM CENTER
07. WATER SUPPLY
08. MARKET
09. FISH MARKET
10. PUTTALAM GALLE FACE
11. BEACH VOLLEY BALL GROUND

இப்படி அலப்பெரிய சேவைகளை செய்து சிறந்த ஊராக தெரிவு செய்யப்பட்ட இப்புத்தளத்தை சிறுக சிறுக செதுக்கி தனது சாணக்கிய மூலையை பயன்படுத்தியது யார் என்று இப்போது கேட்டாலும் அது K.A.B தான் என்று என்னாலும் புத்தி ஜீவிகளாலும் மறுக்க முடியாது.
ஆம் K.A.B நீங்கள் சொல்வது போல் பிரபல ரவுடிதான் யாராலும் சொல்ல முடியுமா? அவர் ஒரு கொலைகாரன் என்று, முடியாது காரணம் அவர் காட்டிய ரவுடிசம்தான் நாம் சுதந்திரமாக ஊரில் நடந்து செல்ல அனுமதித்தது அனைத்து அவமானங்களையும் தான் தாங்கி நாம் அனைவரும் சுதந்திரமாக சென்று கொண்டு இவனின் அரசியல் கொடுங்கோல் என்று அவனை நாம் தூக்கி எறிந்தோம்.
இன்று அவன் இல்லாமல் எமது புத்தள நகரமே அரசியல் அநாதையாக காணப்படுகின்றது. பொலீஸ் பிடித்தால் கூட நான் K.A.B யுடைய படையனி என்று அவர் மீது பழியை போட்டு தப்பி விடும் நாம் இன்று அவனை தூக்கி எறிந்தோம்.
எப்பொழுது கேட்டாலும் இன்னும் எமது கட்சிக்கு பணம் ஒதுக்கவில்லை என்று பின்வாங்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் K.A.B சிறந்தவர் என்றுதான் கூற முடியும்.
கடந்த காலங்களாக K.A.B யை பற்றி பல குற்றசாட்டுக்கள் வைக்கப்பட்டது.
* பெண்னை வைத்திருந்தார்
( ஏன் இஸ்லாத்தில் இரண்டாவது திருமணத்திற்கு அனுமதி இல்லையா)

* குடிகாரன்
( குடிக்காத ஒரு அரசியல் வாதியை இங்கு யாராவது காட்ட முடியுமா)

* ரவுடி
( ஏன் மற்ற அரசியல்வாதிகளை போல் கொலையா செய்தார் இல்லையே)

* களவு
( ஏன் மற்ற அரசியல்வாதிகளை போல் சுவிட்சர்லான்ட் , லண்டன் என்று தோட்டமும் , வீடும், பனம் பதுக்கியுமா அரசியல் செய்தார் லாபம் காணாத அரசியல் வாதிகள் யார்)

இதெல்லாம் ஒரு பிரச்சினையாக கருதிய நீங்கள் ஏன் அவர் செய்த நற்செயல்களை மறந்து விட்டீர்கள். அரசியலில் இருந்து விலகினாலும் கூட மறைமுகமாக பல சேவைகளை செய்து வரும் K.A.B யை நான் நன்கு அறிவேன்.
அவரை வைத்து என்னதான் நீங்கள் செய்யவில்லை இப்பொழுது அனைத்து பிரச்சினைகளுக்கும் மனதளவில் K.A.B யை தேடுவது கூட மறுக்க முடியாது.
நமது ஊரி்ல் கடந்த மாதங்களாக ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு K.A.B இருந்து இருந்தால் அவர் கையாளும் விதமே வேறு காரணம் அரசியல் பலமும் ஆலணி பலமும் அவரின் சாணக்கிய இளைஞர் படையனியும் வைத்து இருந்தார்.
ஆகவே அரசியலில் சாணக்கியம் பெற்ற தலைமைத்துவத்தை சில கறுப்பு ஆடுகள் தங்களது சுய நல தேவைக்கு ஊரை பிரித்து அவரை தோற்கடித்துவிட்டனர். பரவாயில்லை இப்பொழுது அவரும் அவரின் பாடும் ஆனாலும் அவரை சில கறுப்பு ஆடுகள் விடுவதாயில்லை அதுவும் பரவாயில்லை நாம் படித்தவர்கள் மீண்டும் அவரை அரசியலில் வரவேற்க வேண்டும் புத்தளத்தை மீழ் கட்டியெழுப்ப வேண்டும்.
நண்பர்களுக்கு பகிரவும் :

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved