Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

லசந்த தாக்குதலுக்கு பரிசாக ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மேஜர் உதலாகம

Bublished By Online Ceylon on Sunday, July 17, 2016 | 8:34 AM

நேற்றுமுன்தினம் இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரி மேஜர் உதலாகம, லசந்த விக்கிரமசிங்க தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ஜேர்மனின் இலங்கைக்காக தூதுவர் அலுவலகத்தில் சேவையாற்றுவதற்கு இராணுவ புலனாய்வு பிரிவின் பரிந்துரையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சார்ஜன் மேஜர் உதலாகம லசந்த தாக்குதலின் முக்கிய சந்தேகநபராக இரகசிய பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
2009ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற லசந்தவின் தாக்குதலை நேரில் கண்டவர்கள் பலர் இது தொடர்பில் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியிருந்தாலும் தற்பொழுது இவ்வாக்குமூலம் அனைத்தும் காணாமல் போயுள்ளது.
இது தொடர்பில் முதலாவதாக கைது செய்யப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதில் அடையாள அணிவகுப்பு நடத்தாமல் விடுதலை செய்ததாக விசாரணைக்கு பொறுப்பான ஓய்வுபெற்ற உதவி பொலிஸ்மா அதிபர் கீர்த்தி கஜநாயகவுக்கு அரச புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் சீ.என்.வாகிஷ்ட உத்தரவிட்டுள்ளதாக இதுவரை தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் கீர்த்தி கஜநாயக மற்றும் சீ.என்.வாகிஷ்ட ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லசந்த தாக்குதலுக்கு பரிசாக ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சார்ஜன் மேஜர் உதலாகம ஜேர்மனியின் இலங்கைக்காக தூதரகத்தில் மூன்றரை வருடங்களாக சேவையாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டதன் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி 'நேற்று கைது செய்யப்பட்ட சார்ஜன் மேஜர் லசந்த தாக்குதலில் எவ்வித தொடர்புமில்லை. இரகசிய பொலிஸார் தேசிய பாதுகாப்பு தொடர்பில் விளையாடுகின்றனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற அழுத்தம் காரணமாக இதுவரை இராணுவ புலனாய்வு பிரிவு சரிந்துள்ளதுடன் அன்று யுத்தத்தின் போது பாரியளவு சேவையாற்றிய புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்ட அழுத்தம் தொடர்பில் இன்று யாரும் பேச மாட்டர்கள். மிகவும் வருந்தத்தக்க சூழ்நிலை' என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை பொலிஸின் சிரேஷ்ட அதிகாரி 'யுத்தத்தில் உள்வாங்கி யாராலும் கொலை செய்ய முடியாது. கொலையாளிக்கு இராணுவ முத்திரை கொடுப்பதில்லை.
லசந்த தாக்குதல் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் சம்பவமாகும்.
இராணுவ அதிகாரி என்பதனால் இதனை மறைத்த காலமும் இருந்தது. நீதியை மறைக்க நினைத்தால் நிச்சயமாக பிரதிவாதிகளின் மனம் வலிக்கும். தாங்கள் சரியானதை செய்தால் பயப்படத் தேவையில்லை. தனக்கு மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக இதனை செய்ததாக கூறினால் அதற்கான விவரங்கள் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் ஊடாக வழங்க முடியும் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இலங்கையினுள் நியாயமான சட்டத்தினை மீண்டும் உருவாக்குவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியினை பாராட்டியுள்ளதோடு இது தொடர்பில் கவனம் செலுத்தி வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved