Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஊடக அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் – MMD

Bublished By Online Ceylon on Sunday, July 17, 2016 | 6:42 AM

ஊடக அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென ஜனநாயகத்திற்கான ஊடக இயக்கம் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்சகம் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதாகத் தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதாக அமைப்பின் அழைப்பாளர் சந்தன சிறிமல்வத்த தெரிவித்துள்ளார்.
ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதாகவும் தகவல் அறியும் சட்டத்தை நிறைவெற்றுவதாகவும் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களை விமர்சனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார் எனத் தெரிவித்துள்ள அவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களை ஜனாதிபதி பகிரங்கமாக விமர்சனம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒளிபரப்பு நேரத்தில் 80 வீதமானவை அரசாங்கத்தை விமர்சனம் செய்யப் பயன்படுத்துவதாகவும் ஜனாதிபதி விமர்சனம் செய்வது 50 வீதமான நேரத்தை ஒதுக்கி அரசாங்கத்தை புகழ வேண்டும் என்பதற்காகவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தை விமர்சனம் செய்தால் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் என்றா அரசாங்கம் அச்சுறுத்துகின்றது என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கத்தின் இவ்வாறான அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved