Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

அக்கறையுடன் செயற்பட்ட மைத்திரிக்கு மஹிந்த பாராட்டு

Published on Wednesday, July 27, 2016 | 6:36 AM

மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டமானது தனது ஆட்சியில் மஹிந்த சிந்தனை திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட வேலைத்திட்டம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் இந்த திட்டத்திற்கு வரவு செலவு திட்டத்தன் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டது.
அதன் பின்னர் சீன அரசாங்கத்தின் உதவியுடன், மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, அதன் சுவர்கள் கட்டப்பட்டன.
குறித்த வேலைத்திட்டத்திற்கு அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகுந்த அக்கறை காட்டினார்.
அதனை தாம் மிக தெளிவாக கூறமுடியும். இதேவேளை, நாளை கண்டி தலதா மாளிகைக்கு செல்லவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் போது மகாநாயக்க தேரர்களை வழிபட்டு,வழிபாடுகளிலும் ஈடுபட்டு பாத யாத்திரையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved