Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

தலைமையாசிரியைக்கு கைகுலுக்க மறுத்த ஜேர்மனிய முஸ்லிம் மாணவன்

Bublished By Online Ceylon on Friday, July 15, 2016 | 9:30 AM

ஜேர்மனியில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமையாசிரியை கைகுலுக்க முயற்சித்த போது மாணவர் ஒருவர் நிராகரித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kurt-Tucholsky என்ற பள்ளியில் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பாக பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அப்போது, தலைமையாசிரியர் மாணவன் ஒருவனுக்கு கைகுலுக்க முயற்சித்துள்ளார், ஆனால் அந்த மாணவனோ சான்றிதழை மட்டும் வாங்கிகொண்டு கைகுலுக்காமல் நிராகரித்து சென்றுள்ளார்.
அதன்பின்னர் தலைமையாசிரியரை சந்தித்த அந்த மாணவன், எங்களது இஸ்லாம் மார்க்க முறைப்படி அந்நிய பெண்களிடம் கைலுக்க கூடாது, அதனால் தான் அவ்வாறு நடந்துகொண்டேன் அதனை அவமரியாதையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறியுள்ளான்.
இருப்பினும், போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் அதில் வெற்றிபெற்றுவிட்டால், ஆசிரியர்கள் என்ற முறையில் அவர்களை வாழ்த்துவதற்கு கைகுலுக்குவது தான் பின்பற்றப்படுகிறது, ஆனால் இது மதரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், இவ்வித அணுகுமுறையை தாண்டி வேறு முறையை பின்பற்றுவது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும் என ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved