Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வற் வரி தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் சுதந்திரக் கட்சி

Bublished By Online Ceylon on Sunday, July 17, 2016 | 12:09 PM

வற் வரி காரணமாக பொதுமக்களின் பாதிப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாரித்துள்ள அறிக்கை இந்த வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் வற் வரி தொடர்பாக நான்கு பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வற் வரி அதிகரிப்பு தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில், ஜனாதிபதியினால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நான்கு பேர் கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இதில், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, மஹிந்த அமரவீர மற்றும் ராஜாங்க அமைச்சர் திலான் பெரேரா ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
இந்தநிலையில் அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள வற் திருத்த வரி எதிர்வரும் 20ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என்று தெரிய வருகிறது.
ஏற்கனவே இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் இடைக்கால தடைவிதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved