Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

Vat வரி அதிகரிப்பிற்கு எதிராக தலைநகரில் வர்த்தக சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் Video

Published on Friday, July 15, 2016 | 10:52 PM


Vat வரி அதிகரிப்பிற்கு எதிராக கொழும்பு புறக்கோட்டையில் வர்த்தக சமூகத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி புறக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பாரிய கடையடைப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து இருந்தனர்.
அரசாங்கத்தினால் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட வற் வரி அதிகரிப்பை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி புறக்கோட்டையில் இன்று பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தமையால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானர். அதனை தொடர்ந்து வர்த்தக சமூகத்தினர் பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
புறக்கோட்டை துறைமுக நுழைவாயில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது இரண்டாம் குறுக்குத் தெரு, கெய்சர் வீதி மற்றும் முதலாம் குறுக்குத் தெரு ஊடாக கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு தமது கோரிக்கைகள் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு கருத்து தெரிவித்த வர்த்தக சங்கத் தலைவர் நஜிமுதீன், நாம் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறே வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். யாரையும் கடைகளை மூடுமாறு வற்புறுத்தவில்லை. ஆனால் இங்குள்ள வர்த்தகர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து கடைகளை மூடி எமது இந்த வற் வரி அதிகரிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
இந்நிலையில், இந்த வற் வரி அதிகரிப்பை நீக்கி அரசாங்கம் பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்பதை இத்தருணத்தில் வலியுறுத்தி நிற்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து அங்கு விஜயம் செய்த அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் வர்த்தக சமூகத்தினரது இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக திசை திருப்பப்பட்டு விடக்கூடாது என வலியுறுத்தியதுடன், கடைகளை திறக்குமாறும் வலியுறுத்தினர். அவர்களது வேண்டுகோளுக்கமைய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சில கடைகள் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுக்கு பகிரவும் :





Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved