Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் நாட்டில் இல்லை, நாடு ஆபத்தில் - விமல் வீரவண்ச

Bublished By Online Ceylon on Monday, July 18, 2016 | 10:19 PM

ஜனாதிபதியும், பிரதமரும், சபாநாயகரும் தற்பொழுது நாட்டை விட்டு வெளியேறியிருப்பதனால் நாட்டில் அராஜகம் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
பொரல்லை என்.எம். மத்திய நிலையத்தில் இன்று (18) கூட்டு எதிர்க் கட்சி நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
முக்கியமான பொறுப்புக்களை வகிக்கும் மூவரும் நாட்டில் இல்லை. எமது அரசாங்கம் இருந்த காலத்தில் ஜனாதிபதி இல்லாது போனால் பிரதமர் கட்டாயம் நாட்டில் இருப்பார். சபாநாயகர் நாட்டிலேயே இருந்தார். இவர்கள் நாட்டை நிருவகிப்பது தொடர்பில் எந்த விளக்கமும் இல்லாதவர்கள்.
பிரதமர் செல்வது பற்றி ஜனாதிபதிக்குத் தெரியாது. ஜனாதிபதி செல்வது பிரதமருக்குத் தெரியாது. இந்த இருவரும் வெளிநாடு செல்வது பற்றி சபாநாயகருக்குத் தெரியாது. இறுதியில், பார்த்தால் மூவரும் வெளிநாட்டில். ஒருவரும் நாட்டில் இல்லை. ஜனாதிபதி பதவியையும், பிரதமர் பதவியையும் பாதையில் செல்லும் இளைஞனுக்காவது எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இல்லாது போனால் நாட்டில் அராஜகம் ஏற்பட்டு விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved