Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

13 வய­து­ சிறுமி 30 இற்கும் மேற்­பட்ட மனித மிரு­கங்களால் துஸ்பிரயோகம் செய்யபட்ட கொடூரத்தின் விபரம்

Published on Saturday, August 6, 2016 | 3:03 PM(எம்.எப்.எம்.பஸீர்)
தலவல்: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன
பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதி­ரி­சிங்க.

மாத்­தறை, பிட்­ட­பத்­தர பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட தேரங்­கல எனும் பகு­தியில் பின்­தங்­கிய கிராமம் அது. அக்­கி­ரா­மத்தின் 13 வய­து­டைய பாட­சாலை சிறு­மியே தர்ஷி (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது). நாட­ளா­விய ரீதியில் இன்று சிறு­வர்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு கொடூ­ரங்கள் அரங்­கே­றி­வரும் நிலையில் தர்­ஷிக்கு நடந்த கொடூரம் வார்த்­தை­களால் விப­ரிக்க முடி­யா­தது.


தர்­ஷியை கூட்­டா­கவும் தனித்­த­னி­யா­கவும் சுமார் 30 இற்கும் மேற்­பட்ட மனித மிரு­கங்கள் அவ­ளது 7 வயது முதல் பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் சந்­தேக நபர்­களைத் தேடி மாத்­தறை பிராந்­திய சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார விசா­ரணைப் பிரிவு பொலிஸார் தொடர் விசா­ர­ணை­களை நடத்­தி­வரும் நிலையில் சிறுவர் சிறு­மி­யரின் பாது­காப்பு மற்றும் பிள்ளை வளர்ப்பின் போது பெற்றோர் எவ்வளவு தூரம் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும் என்­ப­தற்­காக அந்த கொடூ­ரத்தை வாச­கர்­க­ளுக்கு கூறு­கின்றோம்.


அது கடந்த ஜுலை10 ஆம் திகதி மாத்­தறை - பிட்­ட­பத்­தர பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட தேரங்­கல எனும் பின்­தங்­கிய கிரா­மத்தின் நடுப்­ப­கு­தியில் உள்ள வீடு அது. அந்த வீட்டில் அம்­மாவும் அப்­பாவும் அடிக்­கடி சண்டை பிடித்­துக்­கொண்ட நிலையில் அந்த விவ­காரம் அவர்­களின் மக­ளான 13 வய­து­டைய தர்­ஷியை வெகு­வாக பாதித்­தி­ருந்­தது. பெற்­றோரின் இந்த முரண்­பா­டு­க­ளி­டையே தர்­ஷியும் அவர்­க­ளுடன் கோபிக்கும் நிலை கடந்த ஜுலை 10 ஆம் திகதி ஏற்­பட்­டுள்­ளது.


இத­னை­ய­டுத்து பெற்­றோ­ருடன் கோபித்­துக்­கொண்ட தர்ஷி, வீட்­டா­ருக்கு தெரி­யாமல் அவர்­க­ளிடம் எதுவும் சொல்­லிக்­கொள்­ளாமல் கால்­போ­ன­போக்கில் வீட்டை விட்டு வெளி­யேறி சென்­றுள்ளார்.

இந்­நி­லையில் அன்­றைய தினம் முழு­வதும் தர்ஷி வீட்­டுக்கு வரா­ததால், மாலை வேளையில் தர்­ஷியின் பெற்றோர், தனது மகளைக் காண­வில்லை என பிட்­ட­பத்­தர பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்றை பதிவு செய்­துள்­ளனர். இதனைத் தொடர்ந்து இது குறித்து விசா­ர­ணை­களை உட­ன­டி­யாக பிட்­ட­பத்­தர பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சிசிர ஜய­வீ­ரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.


அதன்­படி சிறுமி தர்­ஷியை பல இடங்­க­ளிலும் தேடிய பொலிஸார் அவரைக் கண்­டு­பி­டிக்க முடி­யாது நவீன தொழில் நுட்­பத்தின் உத­வி­யையும் நாடினர். இத­னி­டையே பிட்­ட­பத்­தர பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சிசிர ஜய­கொடி மாத்­தறை சிறுவர் மற்றும் மகளிர் விவ­காரம் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­வுக்கும் இது குறித்து அறி­வித்து அவர்­களின் உத­வி­யையும் தேடு­த­லுக்கு நாடினார். அதன்­படி மாத்­தறை சிறுவர் மகளிர் விவ­கார விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பெண் பொலிஸ் பரி­சோ­தகர் வருணி கெள­ஷல்யா போக­ஹ­வத்த தலை­மை­யி­லான விசேட குழுவும் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது. தென் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பரும் பொலிஸ் நிர்­வாகம் மற்றும் தேர்தல் விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பா­ன­வ­ரு­மான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, மாத்­தறை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதி­ரி­சிங்க, பொலிஸ் அத்­தி­யட்சகர் கயங்க ஹசந்த மாரப்­பன ஆகி­யோரின் நேரடி மேற்­பார்­வையில் மற்றும் ஆலோ­ச­னைக்கு அமைய இந்த விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.


அதன்­படி கடந்த ஜுலை 21 ஆம் திகதி சிறுமி தர்ஷி பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்டார். மாத்­தறை பிராந்­தி­யத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே மாத்­தறை பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி வருணி கெள­ஷல்யா போக­ஹ­வத்த தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் அவரை மீட்­டனர். இத­னை­ய­டுத்தே விசேட விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

சிறு­மியை மீட்ட பொலிஸ் குழு அவரை உட­ன­டி­யாக மாத்­தறை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்து, வைத்­திய பரி­சோ­த­னைக்குட்­ப­டுத்­தி­யது. இதன்­போது சிறுமி தர்ஷி கொடூ­ர­மாக பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்­டுள்­ளமை உறுதி செய்­யப்­பட்­டது. இத­னை­ய­டுத்து மாத்­தறை சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் வருணி கெள­ஷல்யா போக­ஹ­வத்த சிறு­மி­யிடம் விசா­ரணை செய்து வாக்­கு­மூலம் ஒன்­றினை வைத்­தி­ய­சா­லையில் வைத்தே பெற்றார்.


அதில் ' வீட்­டி­லி­ருந்து வெளி­யேறி குறித்த கிரா­மத்தை கடந்து நடக்கும் போது எனக்கு அறி­மு­க­மான அயல் வீட்டில் வசிக்கும் பஸ் சார­தி­யான சிறில் மாமா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) என்னை அக்­கு­ரஸ்ஸ பகுதியிலுள்ள ஹோட்­ட­லுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து என்னை பலாத்­காரம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து சிறில் மாமா, தனது தொலை­பே­சியில் மேலும் பல­ருக்கு அழைப்பு ஏற்­ப­டுத்தி பலரை அங்கு வர­வ­ழைத்தார். அவர்­க­ளிடம் என்னை ஒப்­ப­டைத்­து­விட்டு சென்­று­விட்டார்' என சிறுமி தர்ஷி பொலிஸ் பொறுப்­ப­தி­காரி வரு­ணி­யிடம் கூறவே உட­ன­டி­யாக பொலிஸார் செயற்­பட ஆரம்­பித்­தனர்.


பலாத்­காரம் செய்­தது மட்­டு­மல்­லாது மேலும் பல மனித மிரு­கங்­க­ளுக்கு சிறு­மியை பங்­கு­போட்­டமை தொடர்பில் இரு பிள்­ளை­களின் தந்­தை­யான குறித்த சார­தியை பிட்­ட­பத்­தர பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஜய­வீர ஊடாக மாத்­தறை சிறுவர் மகளிர் விசா­ரணைப் பிரிவு கைது செய்­தது. அவ­ரிடம் நடத்­திய விசா­ர­ணை­களில் அவர் சிறு­மியை பங்­கு­போட்ட மேலும் பலரை பொலிஸார் அடை­யாளம் கண்டு அவர்­க­ளையும் கைது செய்ய முடி­யு­மா­னது.

இந்­நி­லையில் சிறு­மியை தடுத்து வைத்து பலாத்­காரம் செய்­த­தாக கூறப்­படும் அக்­கு­ரஸ்ஸ பிராந்­தி­யத்தின் சுற்­றுலா ஹோட்­ட­லையும் பொலிஸார் சுற்றி வளைத்­தனர். இதன்­போது அக்­கு­ரஸ்ஸ பிராந்­தி­யத்தின் குறித்த சுற்­றுலா ஹோட்­டலின் உரி­மை­யா­ள­ரையும் முகா­மை­யா­ளர்­க­ளையும் பொலிஸார் கைது செய்­தனர். மூன்று ஹோட்டல் முகா­மை­யா­ளர்கள், ஒரு பெண், தேரர் ஒருவர் உட்­பட 16 பேரை இது­வரை கைது­செய்­துள்­ள­தாக தென் பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­விக்­கின்றார். இவர்­களில் 9 பேரை மாத்­தறை சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார விசா­ரணைப் பிரிவும் மற்­றைய ஏழுபேரை பிட்­ட­பத்­தர பொலி­ஸாரும் கைது­செய்­த­தா­கவும் கைதா­னோரை எதிர்­வரும் 8 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்து மொற­வக்க நீதி­வானின் உத்­த­ர­வுக்கு அமைய மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் அந்த அதி­காரி மேலும் தெரி­வித்தார்.


மாத்­தறை சிறுவர் மற்றும் மகளிர் விசா­ரணைப் பிரிவு இது­வரை செய்­துள்ள விசா­ர­ணை­களில், வீட்­டி­லி­ருந்து வெளி­யே­றிய குறித்த சிறு­மியை பிட்­ட­பத்­தர, அக்­கு­ரஸ்ஸ, மாத்­தறை, காலி, நெலுவ, இனி­தும, நிட்­டம்­புவ உள்­ளிட்ட பல பகு­தி­க­ளிலும் ஹோட்­டல்கள் மற்றும் பாழ­டைந்த இடங்­களில் வைத்து சந்­தே­க­ந­பர்கள் பலர் தனித்­த­னி­யா­கவும் கூட்­டா­கவும் பலாத்­காரம் செய்­துள்­ளமை தெரி­ய­வந்­தது.

வீட்­டி­லி­ருந்து வெளி­யே­றிய சிறுமி தர்ஷி, அன்­றைய தினம் பகல் வேளையில் மட்டும் அதா­வது 8 மணி நேரத்­துக்குள் பிட்­ட­பத்­தர மற்றும் அக்­கு­ரஸ்ஸ பகு­தி­களில் 9 பேரினால் இரக்­கமே இல்­லாமல் பலாத்­காரம் செய்­யப்­பட்­டுள்ளார். அதன்­பின்னர் அன்­றைய தினம் இரவு இனி­தும பகு­தியில் வீடொன்­றுக்கு அழைத்து செல்­லப்­பட்­டுள்ள குறித்த சிறுமி அங்கு வைத்து பல மனித மிரு­கங்­களால் கூட்­டாக பாலியல் பலாத்­கா­ரத்­துக்குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். இவை தொடர்­பி­லான அனைத்து விப­ரங்­க­ளையும் விசா­ர­ணை­யா­ளர்கள் தற்­ச­மயம் வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளனர். இந்­நி­லையில் மறுநாள் அதா­வது ஜுலை 11 ஆம் திகதி குறித்த சிறுமி தர்­ஷியை பலாத்­காரம் செய்தோர் மாத்­தறை பகு­தியில் கைவிட்டுச் சென்­றுள்­ளனர்.

இந்­நி­லையில் தான் இத்­தனை பலாத்­கார கொடூ­ரங்­க­ளையும் தாண்டி இச்­சி­றுமி இறு­தி­யாக தனது தாய் அடிக்­கடி தன்னை அழைத்துச் சென்று வந்த மாத்­தறை பிர­தே­சத்தின் விஹாரை தொடர்பில் ஞா­பகம் வந்து அந்த விஹா­ரைக்கு சென்று தஞ்­ச­ம­டைந்­துள்ளார். அந்த விஹா­ரையின் தேர­ரிடம் தனக்கு நடந்த கொடூ­ரங்­களைக் கூறிய நிலையில், குறித்த சிறு­மி­யையும் அவ­ரது குடும்­பத்­தையும் நன்கு அறிந்த அத்­தேரர் அச்­சி­று­மியை தனது விஹாரை அறைக்கு அழைத்துச் சென்று தங்­க­வைத்­துள்ளார். பின்னர் அந்த அறை­யி­லேயே அவரை பல­முறை பலாத்­காரம் செய்­துள்ளார்.

இந்­நி­லையில் ஒரு­வாறு விகா­ரையில் இருந்து தப்­பி­யுள்ள குறித்த சிறுமியை, மேலும் பலர் பலாத்­காரம் செய்­துள்­ளனர். அத்­தனை பேரும் சிறு­மி­யிடம் நடந்த கொடூ­ரங்­களை கேட்ட பின்னர் அவ­ருக்கு உத­வு­வ­தாக கூறி அழைத்துச் சென்றே இந்த கொடூ­ரத்தை புரிந்­துள்­ளனர்.

இந்­நி­லையில் அச்­சி­று­மியை அறிந்த பலரும் அச்­சி­று­மியை காலி, பூஸா பகு­தி­களில் உள்ள சுற்­றுலா ஹோட்­டல்­க­ளுக்கு அவளை விற்­பனைச் செய்ய முயன்­றுள்­ளனர். எனினும் சிறு­மியின் வயதைக் கருத்தில் கொண்டு பல ஹோட்­டல்கள் சிறுமியை கையேற்க மறுத்­துள்­ளமை விசா­ர­ணை­களில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இது குறித்து பொலிஸார் செய்­துள்ள மேல­திக விசா­ர­ணை­க­ளின்­படி குறித்த சிறுமி அவ­ரது 7 வயதில் முதன் முறை­யாக பலாத்­காரம் செய்­யப்­பட்­டுள்ளார். சிறுமி தர்­ஷியின் சகோ­த­ரனின் நண்பர் ஒரு­வரே இவ்­வாறு அவரை முதன் முத­லாக பலாத்­காரம் செய்­துள்ளார். அதன் பின்னர் 10 வயதில் வய­துக்கு வந்­துள்ள அச்­சி­று­மியை, ஒரு நாள் வீட்­டுக்குள் நுழைந்த பிர­தே­சத்தின் இளைஞர் ஒருவர் பலாத்­காரம் செய்­துள்ளார்.

அதன் பின்னர் சிறு­மியின் வீட்டின் அருகே அவ­ரது தந்தை நடத்தி வந்­த­தாக கூறப்­படும் வேலைத் தளத்தில் வேலை செய்த பல இளை­ஞர்­களும் சிறு­மியை வீட்­டிலும் அருகில் உள்ள புதர்­க­ளுக்கும் அழைத்துச் சென்று தொடர்ச்­சி­யாக துஷ்­பி­ர­யோகம் செய்து வந்­துள்­ளனர். குறைந்த பட்சம் 9 இளை­ஞர்களால் இவ்­வாறு சிறுமி தொடர்ச்­சி­யாக துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்டு வந்­துள்ளார். இந் நிலையில் சிறு­மியை துஷ்­பி­ர­யோகம் செய்த பட்­டி­ய­லா­னது 30 இற்கும் அதி­க­மா­னது என பொலிஸார் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இதற்­காக உதவி ஒத்­தாசை புரிந்­தோரின் பட்­டியல் 50 ஐயும் தாண்­டு­கி­றது. இவர்கள் தொடர்­பிலும் தற்­போது சிறப்பு விசா­ரணை நடைபெறுகி­றது. இதில் குறிப்­பிட வேண்­டிய விடயம் யாதெனில் சிறு­மியை துஷ்­பி­ர­யோகம் செய்த எவரும் 16 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் கிடை­யாது. அனை­வரும் வயது வந்­தோரே.

இந் நிலையில் சந்­தேக நபர்­களைக் கைது செய்யும் நட­வ­டிக்­கையில் பல்­வேறு சுற்­றுலா விடு­தி­க­ளையும் பல பிர­தே­சங்­க­ளையும் தொடர்ச்­சி­யாக பொலிஸார் சுற்­றி­வ­ளைத்து வரு­கின்­றனர். விஹா­ரையில் இருந்து தப்பிச் சென்ற பின்­ன­ரேயே சிறுமி ஏனைய பல இடங்­க­ளுக்கு கொண்டு செல்­லப்­பட்டு பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். சிறு­மியை பலாத்­காரம் செய்­தோரில், பஸ் சார­திகள், நடத்­து­நர்கள், ஹோட்டல் உரி­மை­யா­ளர்கள், முகா­மை­யா­ளர்கள் உள்­ளிட்ட சமூ­கத்தின் பல மட்­டங்­களைச் சேர்ந்­தோரும் அடங்­கு­கின்­றனர்.
தனது பெற்­றோ­ருடன் கோபித்­துக்­கொண்டு அவர்­க­ளது அர­வ­ணைப்பில் இருந்து விடு­பட்ட ஒரு சிறு­மிக்கு இந்த சமூகம் செய்த உதவி, அர­வ­ணைப்பு இது தான். இத்­தனை கொடூ­ர­மான மிரு­கத்­த­ன­மான நட­வ­டிக்­கை­களை செய்­து­விட்டு சமூ­கத்­துக்குள் வலம்­வரும் அனை­வரும் கைது­செய்­யப்­பட வேண்­டி­ய­வர்கள். இல்­லையேல் அந்த விஷ­மி­களால் சமூ­கத்தில் உள்ள ஏனைய சிறுவர் சிறு­மி­யரும் ஆபத்தை எதிர்­கொள்ள வேண்டி ஏற்­படும்.


இலங்­கையைப் பொறுத்­த­வரை சிறு­வர்கள் மீதான வன்­முறை அதி­க­ரித்துச் செல்­வ­தையே அவ­தா­னிக்க முடி­கி­றது. கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் 10 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையின் புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையின் தலைவர் நடாஷா பாலேந்­தி­ராவின் தக­வல்­க­ளுக்கு அமைய, கடந்த 2015 ஆம் ஆண்டு 10732 சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளனர். இது கடந்த 2014 ஆம் ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் அதி­க­ரிப்­பையே காட்­டு­கின்­றது. 2014 ஆம் ஆண்டில் மட்டும் 10315 சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருந்­தனர்.
2015 ஆம் ஆண்டின் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்­களில் 2317 சம்­ப­வங்கள் கொடு­மைப்­ப­டுத்­து­த­லுடன் தொடர்­பு­டை­யது என சுட்­டிக்­காட்டும் தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை,1463 சம்பவங்கள் கல்வி உரிமை மறுக்கப்பட்டமையுடன் தொடர்புடையது என தெரிவிக்கின்றது. அத்துடன் 433 பலாத்காரங்களும் 735 பாலியல் தொல்லைகள் தொடர்பிலான சம்பவங்களும் 365 பாலியல் ரீதியிலான துஷ்பிரயோக சம்பவங்களும், 885 பாலியல் சேஷ்டைகளுடன் தொடர்புபட்ட சம்பவங்களும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதிவாகியுள்ளன.


2015 ஆம் ஆண்டில் கொழும்பு பகுதியிலேயே கூடுதலான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அம்மாவட்டத்தில் மட்டும் 1,522 முறைப்பாடுகளும் கம்பஹா, குருநாகல், காலி, களுத்துறை, இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இருந்து முறையே 1187, 827, 700, 634, 622 ,573 , 540 சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறுகின்றது.
வித்தியா, சேயா, சரண்யா என சிறுவர்கள் மீதான கொடூரங்கள் பட்டியல் படுத்தப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்த போதும் சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்தபாடில்லை.

எனவே பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் மிகக் கவனமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர் அதீத கவனம் செலுத்துவது இன்றியமையாததாகும்.
நண்பர்களுக்கு பகிரவும் :

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved