Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வெளிநாட்டில் கடந்த வருடத்தில் மாத்திரம் 608 பேர் மரணம்

Bublished By Online Ceylon on Sunday, August 21, 2016 | 8:48 AM

இலங்கையிலிருந்து கடந்த வருடத்தில் வெளிநாட்டுகளுக்குச் சென்றவர்களில் 600 இற்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளிலேயே மரணித்துள்ளதாக வெளி விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு மரணித்தவர்களில் 428 பேர் ஆண்கள் ஆவார். 180 பேர் பெண்கள் ஆவார்.
இவர்களில் சுமார் 100 பேர் திடீர் மரணம் அடைந்துள்ளனர். 367 பேர் நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். 9 பேர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளனர். 28 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். மேலும் 109 பேரின் மரணத்துக்கு இதுவரை காரணம் அறியப்படாது மர்மநிலையில் உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, மரணித்தவர்களுக்காக இந்த நாட்டிலுள்ள உறவினர்களுக்கு கடந்த வருடத்தில் மாத்திரம் கிடைக்கப் பெற்ற நஷ்ட ஈட்டுத் தொகை 20 கோடியே 96 லட்சம் ரூபாவாகும். இதன் மூலம் 148 குடும்பங்கள் நலன் பெற்றுள்ளனர்.
வெளிநாட்டவர்களுக்காக பல்வேறு அறிக்கைகள், கடிதங்கள், சான்றிதழ்கள் என்பனவற்றுக்காக வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவு கடந்த வருடத்தில் மாத்திரம் 12 கோடியே 47 லட்சம் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளதாகவும் அமைச்சின் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved