ஜம்மியத்துல் உலமாவை வேதனைப்படுத்தாதீர்கள் - அவசர அறிக்கை

எம்.எல்.எஸ்.முஹம்மத்
1924 ஆம் ஆண்டு முதல் இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் மிக உயர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞ்சர்கள் சபையாக மதிக்கப்பட்டு வரும் அகில இலங்கை ஜெம்மிய்யதுல் உலமாவை "உலமா சபை " சபை என்ற அடையாளப் பெயருடன் 21/08/2016 ஆம் திகதி வீரகேசரி ஞாயிற்றுக்கிழமைப் பத்திரிகையில் "முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவ நெருக்கடி" என்ற தலைப்பின் கீழ்  சகோ.லத்தீப் பாரூகினால் எழுதப்பட்டுள்ள கட்டுரை தொடர்பில் ஆலிம்கள் உட்பட முஸ்லிம்கள் அனைவரும்  கவலை தெரிவித்து வருகின்றனர் .

அகில இலங்கை ஜெம்மிய்யத்துல் உலமா தலைமையகத்தில் இடம்பெற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களுடனான முக்கிய சந்திப்பொன்றின் போது பிடிக்கப் பட்ட முக்கிய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ள மேற்படி சகோதரரின் கட்டுரையில் உலமா சபையின் தலைமைத்தும் மற்றும் அண்மைக்கால பணிகள் தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மிகப்பிழையான அறிமுகத்தையும் தவறான சிந்தனைகளையும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை கட்டுரையை வாசிக்கின்ற அனைவராலும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது .

ஜம்மியாவின் தலைவரை சர்ச்சைக்குரிய தலைவர் என அறிமுகம் செய்துள்ள கட்டுரையாளர் இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்பாக  ஜம்மிய்யா கொண்டுள்ள நிலைப்பாடுகள் கருத்துக்கள் அனைத்தும் தூர நோக்கு அற்றவைகள் எனவும் சமூகப் பேரழிவுகளை ஏற்பத்தக் கூடியவைகள் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் அக்கட்டுரையாளர்  "துறை சார்ந்த அறிஞ்சர்கள் இல்லாத உலமா சபையானது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் , பொருளாதார ,கல்வி மற்றும் சமூகப் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பது மொத்த முஸ்லீம்களுக்கும் இழைக்கும் சமூக அநீதி" எனவும் ஜம்மியாவைப் பற்றி மிகப் பிழையாக விமர்சித்துள்ளார்.

வீரகேசரி கட்டுரையாளர் சகோ.லத்தீப் பாரூக் அவர்கள் தனது கட்டுரை தொடர்பான குற்றச்சாட்க்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தந்திரத்துடன் அ.இ.ஜ.உ. சபையின் பெரயரை உலமா சபை என்ற அடையாளப் பெயருடன் குறிப்பிட்டுள்ளதுடன்  மற்றும் பல முக்கியஸ்த்தர்களின் பெயர்களை குறிப்பிடுவதனையும் தவிர்த்துக் கொண்டுள்ளார்.

அத்துடன் உலமா சபை தொடர்ந்தும் பொறுப்பற்ற விதமாக ஜெனீவா மனித  உரிமைகள் மகாநாட்டில் அரசாங்கத்திற்கு சார்பாக  செயற்பட்டதனால் தேசிய ஒற்றுமைக்கு பாரிய அச்சுறுத்தல்களை ஜம்மிய்யா உருவாக்க முற்பட்டதாகவும் மற்றும் ஹலால் பிரச்சினை தொடர்பில் ஜம்மிய்யா சரியாக விளக்கம் அளிக்கவில்லை   எனவும் உலமா சபை தொடர்பில் பல குற்றச்சாட்டுக்களை கட்டுரையாளர் முன்வைத்துள்ளார்.

தேசிய சூரா சபை சமர்ப்பித்த பல கேள்விகளுக்கு உலமா சபை இன்னும் பதிலளிக்கத் தவறியுள்ளது எனவும் குறிப்பிட்டு  ஜம்மிய்யாவின் அறிவுத் தரம் பற்றி தனது கட்டுரையின் இறுதியில் குறை கண்டுள்ளார்.

இலங்கையில் தகவல் அறியும் உரிமைகள் சட்டம் நடைமுறைக்கு  வந்துள்ள நிலையில் ஜம்மிய்யா தொடர்பாக தமிழ் பேசும் உலக மக்களிடத்தில் மிகத் தவறான கருத்துக்களை கட்டுரையாளர் சகோ.லத்தீப் பாரூக் அவர்கள் பரப்ப முயற்சிப்பது ஜம்மிய்யாவின் அங்கத்தவர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது .

சகோ.லத்தீப் பாரூக் அவர்கள்  ஜம்மிய்யாவின் தலைமைத்தும் மற்றும்  அதன் சமூகப் பணிகள் தொடர்பில்  மேற்படி தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்ப முயசித்தமை தொடர்பாக  வீரகேசரி பத்திரிகை நிறுவனத் தலைவருக்கும் தமது முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் .

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.