Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இன்று உயர்தர பரீட்சை ஆரம்பம் - விதிமுறைகளை மீறுவோர் கைது

Bublished By Online Ceylon on Tuesday, August 2, 2016 | 7:13 AM

இன்று ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தர பரீ்ட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை உயர்தர பரீட்சை 2,204 பரீட்சை மத்திய நிலையங்களில் நாளை 27 ஆம் திகதி முதல் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.
பரீட்சார்த்திகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பிலும் அவர் தௌிபடுத்தினார்.
பரீட்சை மு.ப 8.30 ஆரம்பமாகுவதால் பரீட்சார்த்திகளை மு.ப.8 மணிக்கு முன்னர் பரீட்சை மண்டபத்திற்கு வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பரீட்சார்த்திகள் பரீட்சை அனுமதிப்பதிரம்,தேசிய அடையாளஅட்டை அல்லது கடவுச்சீட்டினை பரீட்சை மண்டபத்திற்குள் கட்டாயம் எடுத்துவருதல் வேண்டும்.
இம்முறை க.பொ.த உயர் தரப்பரீட்சையில் 3,15,605 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 2,40,991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும், 74,614 வௌிவாரி பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார சுட்டிக்காட்டினர்.
பரீட்சை மண்டபங்களுக்கு மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் எடுத்து வருவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாக. மீறி எடுத்து வருவோது கைது செய்யப்படுவதுடன் 5 வருடங்கள் எந்த அரச பரீட்சைகளிலும் கலந்து கொள்ள முடியாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved