மஹிந்த குறித்த இரகசியங்களை மைத்திரி வெளிப்படுத்த வேண்டும் : ஜே.வி.பி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பான இரகசியங்களை ஜனாதிபதி மைத்திரி வெளிப்படுத்த வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது.
தங்கால பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இக் கோரிக்கையை முன்வைத்தார்.
மஹிந்த ஆதரவாளர்கள் புதிய கட்சியை ஆரம்பித்தால் பல இரகசியங்களை வெளியிட நேரிடும் என, அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற தேசிய அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வில் உரையாற்றியபோது ஜனாதிபதி மைத்திரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாட்டை ஆண்ட ஒருவர் இழைத்த குற்றங்களையே ஜனாதிபதி இரகசியமாக வைத்துள்ளாரென குறிப்பிட்ட அநுரகுமார, மஹிந்த தரப்பினர் புதிய கட்சியை ஆரம்பித்தாலும் ஆரம்பிக்காவிட்டாலும் அவர்கள் தொடர்பான இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.