Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

தேசியத்தின் சொத்துக்களை பதுக்கிய கனடாபுலி பினாமிகள் உலகத்தமிழ் அமைப்பினர்

Bublished By Online Ceylon on Monday, August 8, 2016 | 10:18 PM

தேசியத்தின் சொத்துக்களை பதுக்கிய கனடாபுலி பினாமிகள் 
உலகத்தமிழ் அமைப்பினர்
புதிய வடிவில் மக்களை ஏமாற்றி வருமானத்தை பெருக்குவதற்கு முதன் முறையாக பணத் திருவிழாவைஆரம்பித்தனர் 
ஆகஸ்ட் 6,7ம் திகதிகளில் Markham FairGroundல்.

முள்ளிவாய்க்காலிற்கு பிறகு பல மில்லியன் சொத்துக்களை பதுக்கிய கனடா உலகத்தமிழர் அமைப்பின்(WTM) பிணாமி உதிரி அமைப்புக்களான CTR வானொலி, NCCT, அறிவகம், விளையாட்டுத்துறை, உலகத்தமிழர் பத்திரிக்கை, வணிகம் மற்றும் ஏசியன் புடவைக்கடையும் சேர்ந்து தமிழ் நாட்டில் இருந்து சினிமாவில் நடனமாடும் மங்கையர்களிற்கு பல லட்சம் கொடுத்து கனடியத் தமிழர்களை போதையில் மயக்கி உள்வாங்குவதற்கு போடும் மெகாத் திட்டம் தான்பணவிழா.
முள்ளிவாய்க்கால் வரை பாதிக்கப்பட்ட மக்களையும், போராளிகள் குடும்பங்களையும் மற்றும் மாவீரர் குடும்பங்களையும் நடுத்தெருவில் அநாதைகளாக இருக்கவிட்டு, தேசியத்தின் சொத்துக்களில் தங்களின் குடும்பங்களோடு ராஜவாழ்க்கை வாழும் இந்த அமைப்புக்களின் பொறுப்பாளர்கள் நடத்தும் இந்த விழாவிற்கு மக்கள் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும் ?

2) இந்த கனடா உலகத்தமிழர் அமைப்பினரும் மற்றும் பிணாமி அமைப்புகளும் கடந்த 7 வருடமாக ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு என்ன செய்தார்கள் என்று மக்களிற்கு வெளிப்படையான பட்டியலை வெளியிடத் தயாரா ?
3) மக்களிடம் இருந்து இவர்கள் கடன் அடிப்படையில் வேண்டிய பல ஆயிரம் டொலர்களை இன்று வரை யாருக்காவது திருப்பிக் கொடுத்தார்களா ?
மக்களே, இவர்கள் எந்தக் காலத்திலும் திருந்தமாட்டார்கள் மற்றும் பல வகையான பொய்களை சொல்லி மக்களை திரும்ப திரும்ப ஏமாற்ற நினைப்பவர்கள்.
2020ல் வட்டுக்கோட்டை தீர்மானமென்று புதிய அரசியல் செய்வதன் நோக்கம் தங்களிடம் இருக்கும் தேசியத்தின் சொத்துக்களை பாதுகாப்பாக பதுக்குவதற்கு மட்டும் தான்.
கனடாத் தமிழர்களே சிந்தியுங்கள் உங்களின் சுயபுத்தியில் செயற்படுங்கள். இவர்களின் பாதாள வலையில் விழுந்துவிடாதீர்கள்.
நண்பர்களுக்கு பகிரவும் :





LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved