Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

தெஹிவளை சட்டவிரோத கட்டுமானங்களை உடனடியாக அகற்றவும் – பைசல் முஸ்தபா

Bublished By Online Ceylon on Friday, August 5, 2016 | 9:25 AM

தெஹிவளை பிரதேசத்தில் காணப்படும் சட்டவிரோத கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசல் முஸ்தபா தெஹிவளை, கல்கிஸ்சை மாநகர ஆணையாளர் தமிக்க முதுகலவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தெஹிவளை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற தெஹிவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போதே அமைச்சர் இந்த பணிப்புரை விடுத்தார்.
குழுவின் இணைத் தலைவர்களான பைசல் முஸ்தபா மற்றும் கல்கிஸ்சை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சுனேத்ரா ரணசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
தெஹிவளை ஹில்டா வீட்டுத் தொகுதிக்கு பின்னால் கால்வாய் வீதியின் இருமருங்கு மற்றும் கால்வாய் வீதியை தடுக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன சட்டவிரோத கட்டுமானங்கள் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக இந்த கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய இந்த சட்டவிரோத கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு அமைச்சர் பைசல் முஸ்தபா தெஹிவளை, கல்கிஸ்சை மாநகர ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார். 
நண்பர்களுக்கு பகிரவும் :





LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved