எம்பியர் 13 வகையான பிளக்குகளுக்கே இனி அனுமதி

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தரத்தை விட குறைவான பிளக்குகளுடன் கூடிய மின் உபகரணங்கள் மற்றும் பிளக் பொயின்டுகளை இலங்கைக்கு கொண்டு வருவதோ விற்பனை செய்வதோ தடை செய்யப்படவுள்ளதாக, மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

இதற்கமைய ஜி பிளக்குகள் (G plug) என அழைக்கப்படும் எம்பியர் 13 வகையான பிளக்குகளே (13 ampere plug) தேசிய தரம் வாய்ததாக கொள்ளப்படும் எனவும், கூறப்பட்டுள்ளது. 

இதன்படி வட்டவடிவமாக பிளக்குகளுடன் கூடிய (round pin plug) மின் உபகரணங்கள் பயன்படுத்துவதே, விற்பனை செய்யப்படுவதோ தடைசெய்யப்பட்டுள்ளன. 

மின் உபகரணங்களைப் பயன்படுத்தும் போது, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.