14 வயது மருமகளை அழைத்து சென்ற மாமனார் முச்சக்கரவண்டியுடன் தலைமறைவு

பொகவந்தலாவ ரானிகாடு தோட்டத்தில் 14 வயது பாடசாலை சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் அழைத்து சென்ற மாமனாரும் குறித்த சிறுமியும் தலைமறைவாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் 02.09.2016 அன்று பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் நேற்று 02.09.2016 அன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
குறித்த பாடசாலை மாணவி அன்று காலை 07.45 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி சென்றுள்ளதை வேறு ஒரு சிறுமி கண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுமியின் மாமனார் கண்டி கலகா பகுதியை சோ்ந்தவா் என பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.
குறித்த மாணவி பொகவந்தலா லோய்னோன் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 09 இல் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடா்பில் சிறுமியின் மாமனாரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.