காணாமற்போன வர்த்தகர் மொஹமட் நஸ்ரின் தொடர்பில் 20 பேரிடம் வாக்குமூலம்

திருகோணமலையில் காணாமற்போனதாக கூறப்படும் வர்த்தகர் தொடர்பில் 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
வர்த்தகரை தேடி பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சம்பவம் தொடர்பில் எந்த விதமான தகவல்களும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் திருகோணமலை நகரிலுள்ள அனைத்து சீ.சீ.டி.வி கமராக்களின் காணொளிகளையும் பரீட்சித்த போது குறித்த வர்த்தகர் காலை உணவு உட்கொண்ட ஹோட்டலில் சீ.சீ.டி.வி கமராவில் மாத்திரமே அவர் தென்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம பகுதியைச் சேரந்த மொஹமட் நஸ்ரின் என்பவரே காணாமற்போயுள்ளதுடன் அந்த நாளில் 13 பேர் மூன்று கார்களில் தங்காபரண ஏலமொன்றுக்கு நேற்று திருகோணமலைக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.